Lushgreen

நான் வந்துட்டேன்னு சொல்லு! திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! மாஸ் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Apr 27 2021 06:12:00 PM

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக வளம் வந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற வெற்றிப் படைப்புகளை கொடுத்தார். என்னதான் இவர் படங்கள் வெற்றி பெற்றாலும் இவர் கதை தி ருட்டில் ஈடுபடுகிறார் என்று ஆரம்பம் முதலே இவர் மீது கு ற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

murugadass fantasy pan india movie

விஜயகாந்த் நடித்த ரமணா, கஜினி, கத்தி, சர்க்கார் போன்ற படங்களின் கதைகளை இவர் தி ருடினார் என்ற பேச்சு அடிபட்டது. இருந்தாலும் ஆதாரப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஸ்பைடர் என்ற படத்தை மகேஷ் பாபுவை வைத்து எடுத்தார். அன்று முதல் இவரிடம் கதை கேட்க யாரும் தயாராக இல்லை.அந்த அளவிற்கு படம் செம்ம மொக்கையாக இருந்தது. ரஜினியை வைத்து எடுத்த தர்பார் படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை.

murugadass fantasy pan india movie

தளபதி 65 படத்தை இவர் தான் இயக்கப்போகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் முன் திடீரென விஜய்யும் இவரை கழட்டி விட்டார். இப்போதைக்கு சன் பிக்சர்ஸில் ஒரு படம் பண்ணுறேன், வருங்காலத்தில் நம்ம வேற ஒரு படம் பண்ணிக்கலாம் என்று விஜய் இவரிடம் சொன்னதாக தகவல்கள் வெளியாகின. இனிமேல் முருகதாஸ் அவ்வளவு தான் என அனைவரும் பேசத் தொடங்கினார்கள்.

murugadass fantasy pan india movie

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேன்டசி படம் பண்ணப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் பேன் இந்தியா படமாக வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. தன்னை ஒதுக்கியவர்கள் அனைவருக்கும் தான் யார் என்று காட்டும் நேரம் வந்துவிட்டது என்று இவரது நட்பு வட்டாரத்தில் இவர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

murugadass fantasy pan india movie