தடைகளை வென்று சரித்திரம் படைத்தவள்..
  • 07:22AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 07:22AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

முனீபா மசாரி(Muniba Mazari) பாகிஸ்தானின் இரும்பு மனிதி என்றும் பாகிஸ்தானின் உண்மை முகம் என்று வர்ணிக்கப்படுபவர்.பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள பெண்களின் தூதராகவும் பதவி வகிக்கிறார்.பாக்கிஸ்தான் மட்டுமின்றி உலகில் உள்ள அணைத்து பெண்களுக்கும் ஒரு முன்னோடியாக விளங்குகிறார்.

Related image

1987 ஆண்டுப் பாகிஸ்தானில் பிறந்த இவர் கட்டுக்கோப்பான பலோச் குடியைச் சேர்ந்தவர்.கலைக்கல்லூரியில் படிப்பை முடித்த இவர் ஒரு ஓவியராக வேண்டும் என்ற கனவை மறந்து பெற்றோரின் விருப்பத்தால் தன்னுடைய 18 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார்.திருமணம் ஆன சிறிது காலத்தில் முனிப அவர்களின் வாழ்க்கையில் அந்த அசம்பாவிதம் நடந்தது.

Image result for muniba mazari

2007 ஆம் ஆண்டில் தன்னுடைய கணவருடன் காரில் சென்றுகொண்டிருந்த போது திடீரெனச் சாலை அருகில் உள்ள ஒரு சாக்கடை தொடுத்தியில் விழுந்தது.அவருடை கணவர் எப்படியோ வெளியேறி விட்டார் ஆனால் அவர் காரின் உள்ளே மாட்டிக்கொண்டார்.மிகவும் சிரமப்பட்டு அவரைக் காப்பாற்றி அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்(அவருக்கு அடிபட்ட இடத்தில் இருந்து அருகில் இருந்த மருத்துவமனை மூன்று மணி நேரப் பயணத்தில் உள்ளது).கை உடைந்து அவர் மருத்துவமனைக்குச் செல்லும் அந்தப் பயணம் தான் தன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய வலி என்று அவர் பல முறை கூறியிருக்கிறார்.

மருத்துவமனையில் சேர்ந்த பின் அவருக்குப் பல அதிர்ச்சிகள் காத்திருந்தது.அவருடைய முதுகெலும்பு அடிபட்டுள்ளதால் அவர் தாயாகும் திறனை இழந்து விட்டார்,மேலும் இனி அவரால் நடக்க முடியாது,வரைய முடியாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அந்தத் தருணம் அவருடைய வாழ்க்கையின் மோசமான தருணம் அவருடன் அவருடைய சகோதரர் மற்றும் அவருடைய தாயார் மட்டுமே உள்ளனர்.அவருடைய தாயின் அரவணைப்பால் தன்னுடைய துக்கத்தை மறக்க முயற்சித்தார்.அந்தத் தருணம் அவர் ஒரு முடிவு செய்தார் தன்னுடைய வாழ்க்கையில் உள்ள அணைத்து பயத்தையும் போக்க வேண்டும் என்று.

Image result for muniba mazari son

அவருடைய முதல் பயம் விவாகரத்து அதைத் துணிந்து செய்தார்.அவருடைய கணவர் மறுமணம் செய்துகொள்ளப் போகும் செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.அவருடைய மிகப் பெரிய பயம் அவரால் தாயாக இருக்க முடியாது என்பது தான்.அப்பொழுது அவருக்கு ஒரு உண்மை விளங்கியது இந்த உலகில் பல குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் இருக்கின்றனர் அவர்களில் ஒருவரைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தார்.

பாகிஸ்தானில் உள்ள பல காப்பகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைத்தார்.பதில் வராமல் இரண்டு வருடம் காத்திருந்தார்.இரண்டு வருடம் கழித்து ஒரு குழந்தை இருப்பதாக அவருக்கு ஒரு அழைப்பு வந்தது அந்தத் தருணம் அவர் தன்னுடைய பெண்மையை உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.

ஓவியத்தில் அதிகம் ஆர்வமுடைய அவர் தன்னுடைய மரணப்படுக்கையில் வரைந்த ஒரு ஓவியம் பலரிடம் இருந்தும் பாராட்டுகளைப் பெற்றது.அந்த ஓவியத்தைப் பற்றி அவர் கூறும்போது "இந்த ஓவியத்தை அனைவரும் பார்த்து பாராட்டுகின்றனர் ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும் அதில் உள்ள வலி என்ன என்பது””.

Image result for muniba mazari speech

சக்கர நாற்காலியில் அவருடைய பயணம் தொடங்கியது,வெளியுலகில் அவர் படத் தொடங்கினார்.பெண்களுக்கென்று எந்தக் கோட்பாடும் இல்லை என்பதை வலியுறுத்தி வருகிறார்.முப்பது வயதுடைய அவர் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட முப்பத்து வயதுக்குள் சாதித்த முப்பது பெண்களின் பட்டியலில் இவரும் இருக்கிறார்.இன்றும் உலகம் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று உரையாடுகிறார்.தன்னம்பிக்கை இழந்த பலருக்கும் ஒரு கை கொடுத்து உதவி வருகிறார் இந்தச் சாதனை பெண்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top