#BizarreNews ஆபரேஷன் செய்யும்போது ஆண் உடம்பில் இருந்த பெண் உறுப்பைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி!
  • 16:10PM Jul 13,2019 Mumbai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:10PM Jul 13,2019 Mumbai

ஆண் உடம்பில் பெண் உறுப்பு? திருநங்கை பற்றிய செய்தியா என்று யோசிக்க வேண்டும். இது மருத்துவர்களையே அதிர்ச்சி அடையவைத்த செய்தி! நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் ஒரு சில நோய்கள் பற்றிக் கேட்டதும் தலை சுற்றிவிடும். அப்படி ஒரு நோயை பற்றி அறிந்து மும்பையைச் சேர்ந்த JJ Hospital மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Infertility ANABOLICSTEROIDS

கடந்த மாதம் 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் Infertility காரணமாகச் சிகிச்சை பெற JJ Hospital வந்துள்ளார். இவருக்கு முதலில் Infertility என்று நினைத்து தான் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர், அதன்பின் இவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த நபரின் உடம்பில் செயல்படாத கருப்பை, ஃபலோபியன் குழாய்கள் மற்றும் பெண் உறுப்பு ஆகியவை இருந்துள்ளது.

ENLARGEMENT PILLS

இதைப் பற்றி அந்த மருத்துவமனையின் Urology மருத்துவர் கூறுகையில், இது மிகவும் அரியவகை நோய் என்றும், இதுவரையில் மொத்தம் 200 பேருக்கு மட்டுமே இந்த நோய் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நோயின் பெயர் Persistent Mullerian Duct Syndrome. தற்போது அந்த நபருக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து அவருக்கு இருந்த பெண் உறுப்புகளை அகற்றியுள்ளனர்.

தற்போது ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து அந்த நபரின் குணமடைந்து வருகிறார். அவரின் பெண் உறுப்புகளை அகற்றினாலும் அவருக்கு Azoospermia இருக்கும் காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. Azoospermia என்பது விந்தணுக்கள் குறைபாடாகும். இந்த ஆபரேஷன் குறித்துப் பேசிய மருத்துவர் Venkat Gite, நாங்கள் அவருக்கு ஆபரேஷன் செய்தபோது வெறும் வயிற்று கீழே மட்டும் தான் பிரச்சனை என்று நினைத்தோம், ஆனால் ஆபரேஷன் செய்யும் போது தான் அவருக்குப் பெண் உறுப்பு, ஃபலோபியன் குழாய்கள் இருப்பதாய் கண்டு அதிர்ந்தோம். தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top