Misc

இந்தியாவிற்கு 4 ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அதில் 2 ரூபாய் வருமானம் மும்பையில் இருந்து வருகிறது என்று சொல்கிறார்கள்! இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது? இந்த நிலை மாறுமா?

Jul 30 2021 05:21:00 PM

மும்பை என்பது வியாபாரங்கள் நிறைந்த ஒரு இடம். இங்கே விவசாயம் செய்யவே முடியாது. முன்னாடி காலங்களில் இங்கே மார்க்கெட் மூலம் விற்பனை அதிகரித்தது. தற்போது ஷேர் மார்க்கெட் மூலம் இங்கே வருமானம் அதிகரித்து வருகிறது. மிளகு, அரிசி போன்ற பொருட்களை 10 ரூபாய்க்கு தென் இந்தியாவில் வாங்கி பாக்கெட் போட்டு மும்பையில் 20 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

mumbai city best always

கோதுமை,இரும்பு போன்ற பொருட்களை வடஇந்தியாவில் 10 ரூபாய்க்கு வாங்கி பாக்கெட் போட்டு 20 ரூபாய்க்கு மும்பையில் விற்கிறார்கள். இத்தனைக்கும் மும்பையில் சொல்லிக்கொள்ளும்படி எந்த வளமும் இல்லை. தென் இந்தியர்கள் அதிகம் மும்பையில் வேலை செய்கிறார்கள். குஜராத்திகள் மும்பையில் அதிகம் வியாபாரம் செய்கிறார்கள்.

mumbai city best always

இந்த தென் இந்திய மூளையும், குஜராத்திய வியாபாரமும் சேர்ந்து மும்பையை இந்தியாவின் முதன்மை பொருளாதார பகுதியாக மாற்றிவிட்டன. படங்கள் கூட அதிக அளவில் மும்பையில் தான் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் மும்பை மற்றும் டெல்லியை பிரதானப்படுத்தி எல்லா விஷயங்களையும் செய்ததால் இந்த அளவு வளர்ச்சியை மும்பை அடைந்துள்ளது.

mumbai city best always

தற்போது தான் பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகள் மும்பைக்கு போட்டியாக முன்னேற்றம் அடைந்த பகுதிகளாக மாறிவருகின்றன. இத்தனைக்கும் இந்தியாவின் முக்கிய பகுதியாக கருதப்படும் மும்பையில் வி*பச்சாரம் நடப்பதெல்லாம் சர்வ சாதாரண விஷயம். க*ள்ளக் க*டத்தல், கொ*லை, கொ*ள்ளை, வ*ழிப்ப*றி இங்கே சாதாரணமாக நடைபெறும் விஷயங்கள்.

mumbai city best always

இந்தியாவில் உள்ள எல்லா கம்பெனிகளின் தலைமை அலுவலகங்கள் மும்பையில் தான் இயங்கி வருகின்றன. இந்த நிலை மாறினால் மட்டும்தான் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் தொழில்முறை பன்மடங்கு பெருகும். எல்லா நிறுவனங்களும் தங்கள் மாநிலங்களில் தலைமை அலுவலகங்கள் கொண்டு தங்கள் பணிகளை தொடர்ந்தால் அந்த நிறுவனம் மட்டுமல்லாமல் அந்த மாநிலத்தின் வளமும் பல மடங்கு அதிகரிக்கும்.

mumbai city best always