Misc

பணக்கார ஆண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்ணிற்கு முகேஷ் அம்பானி சொன்ன பதில்! இனிமேல் எந்த பெண்ணும் கோடிகளில் சம்பாதிக்கும் பையன் வேண்டும் என்று யோசிக்கவே மாட்டர்கள்!

Aug 09 2021 03:22:00 PM

நம் நாட்டில் வெறும் அழகை மட்டும் வைத்துக்கொண்டு நாம் என்ன வேண்டுமென்றாலும் சாதித்து விடலாம் என்ற எண்ணம் பல பெண்களுக்கு இருக்கிறது. தன் அழகால் நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் கிடைத்து நாமும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். அண்மையில் ஒரு பெண் சமூக வலைதளத்தில் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அந்த பெண்ணின் பெயர் பூஜா. என் வயது 25, நான் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பேன். என்னுடைய ஸ்டைல் மற்றும் அழகு உங்களை பிரமிக்க வைக்கும். நூறு கோடி ரூபாய் வருடத்திற்கு சம்பாதிக்கும் மணமகன் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

mukesh ambani epic reply girl

நம்ம முகேஷ் அம்பானி எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பதை இந்த இந்தியாவே அறியும். இவர் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டுள்ள நபர். இந்த கேள்வியை சமூக வலைதளத்தில் முகேஷ் அம்பானி பார்த்து பதில் அளித்துள்ளார். நம்ம இந்தியாவில் நிறைய பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. எல்லோரும் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஆண்மகனை திருமணம் செய்ய நினைக்கிறார்கள். எனக்கு ஆண்டு வருமானமும் நூறு கோடிக்கு மேல் தான் உள்ளது.

mukesh ambani epic reply girl

ஒரு முதலீட்டாளராக நான் இந்த கேள்விக்கு பதில் அளிக்க உள்ளேன். பெண் என்பது அழகு. ஆண் என்பது பணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். பெண்ணின் அழகு வருடங்கள் செல்லச் செல்ல குறைந்து கொண்டே இருக்கும். பணத்தின் மதிப்பு வருடங்கள் செல்லச் செல்ல அதிகமாகும். 10 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணின் அழகு குறைந்துவிடும். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு பணத்தின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

mukesh ambani epic reply girl

தேய்மானமாகும் பொருளின் மீது எந்த முதலீட்டாளரும் முதலீடு செய்ய விரும்பமாட்டார். உங்கள் அழகைப் பார்த்து 100 கோடி சம்பாதிக்கும் நபர் டேட்டிங் செய்யத்தான் விரும்புவாரே தவிர உங்களை திருமணம் செய்ய விரும்பமாட்டார். நூறு கோடி சம்பாதிக்கும் ஆணை திருமணம் செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டு 100 கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளர முயற்சி செய்யுங்கள் என்று முகேஷ் அம்பானி அந்த பெண்மணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதை பார்த்த அனைத்து நெட்டிசன்களும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். இனிமேலாவது அதிக பணம் சம்பாதிக்கும் ஆண்மகன் வேண்டும் என்று சுற்றித் திரியும் பெண்கள் திருந்துவாங்கன்னு நம்பலாம்.

mukesh ambani epic reply girl