Lushgreen

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் எவ்வாறு துளியும் சுயநலம் இல்லாமல் இருக்க முடியும்? இவரு விஷயத்தில் அதைப்பத்தி சொல்ல வேண்டுமா?

Jul 30 2021 12:14:00 PM

மிஸ்டர் கூல் கேப்டன் என்றால் நம்ம தல தோனி மட்டுமே. தோனி இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்று ஒரே வார்த்தையில் கூறிவிட முடியாது. ஐசிசி யின் மூன்று விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்த முதல் மற்றும் ஒரே கேப்டன் தோனி மட்டுமே.

ms-dhoni great-man-of-all-time

கிரிக்கெட் விளையாட்டில் சுயநலம் இன்றி விளையாடும் நபரை காண்பது கடினம். அந்த வகையில் மகேந்திர சிங் தோனி தனது முழு கிரிக்கெட் வாழ்க்கையிலுமே சுயநலம் இன்றி விளையாடினார். வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்களை ஊக்குவித்து வழிநடத்திச் செல்வதே அவரது குணமாகும்.

ms-dhoni great-man-of-all-time

தோனி தன்னுடைய வாழ்க்கையில் இந்த உயரத்துக்கு வந்திருப்பதற்கு அவருடைய சுயநலமற்ற கிரிக்கெட் வாழ்க்கையை காரணமாகும். தோனியின் சுயநலமற்ற கிரிக்கெட் பயணத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது என்றாலும் எனக்கு தெரிந்த ஒரு சில சம்பவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

ms-dhoni great-man-of-all-time

2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி கேப்டனாக இருந்த போது ஒரு அற்புதமான காரியம் செய்தார். அந்த போட்டியானது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதை உணர்ந்த தோனி இந்திய அணி போட்டியில் வெற்றி பெறும் நேரத்தில் கங்குலியை அழைத்து கேப்டன்ஷிப் செய்யச்சொன்னார். முன்னாள் கேப்டன் கங்குலிக்கு இதன் மூலம் உரிய மரியாதையைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார் தோனி.

ms-dhoni great-man-of-all-time

2013 ஆம் ஆண்டு நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் தோனி காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காமல் ஓய்வெடுத்தார். எனவே விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டன் ஆக செயல்பட்டார். இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோனி காயத்திலிருந்து மீண்டு வந்து அணியை வெற்றி பெற வைத்ததுடன் தொடரையும் வென்று கொடுத்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோப்பையை விராத் கோலியை அழைத்து பெறச்செய்து தனது பெருந்தன்மையை நிரூபித்தார் தோனி.

ms-dhoni great-man-of-all-time

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்திய அணியில் இருந்த சீனியர் வீரர்களை குறைத்து இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தார் தோனி. அந்த சமயத்தில் தான் சேவாக், கம்பீர், யுவராஜ் போன்றவர்கள் அடுத்தடுத்து அணியில் இருந்து வெளியேறினர். இதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வருங்கால அணியை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் துணிச்சலான முடிவுகளை எடுத்தார் தோனி.

ms-dhoni great-man-of-all-time

டெஸ்ட் போட்டியில் தி*டீரென ஓய்வை அறிவித்து இளம் வீரர்கள் உருவாக வாய்ப்பை வழங்கினார் தோனி. ஒரு சமயம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றிக்கு தேவைப்படும் ஒரு ரன்னை அடிக்க விராத் கோலிக்கு வாய்ப்பை விட்டுக் கொடுத்தார் கேப்டன் தோனி. அந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கோலிக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த வாய்ப்பை கொடுத்து கோலியை உற்சாகப்படுத்தினார் தோனி.

ms-dhoni great-man-of-all-time

தோனி எந்த ஒரு தொடராக இருந்தாலும் வெற்றி பெற்ற பிறகு நடக்கும் பரிசளிப்பின் போது அணியில் இருக்கும் இளம் வீரர்களிடம் கோப்பையை கொடுப்பதை ஒரு வழக்கமாக வைத்திருப்பார். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக செயல்பட்டு 5 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜாவை பாராட்டும் விதமாக கோப்பையை வாங்கிய உடனே அதை ஜடேஜாவிடம் கொடுத்தார் தோனி. இத்தகைய குணங்களால் தான் எல்லோருடைய மனதையும் வென்ற மாமனிதராக ஜொலிக்கிறார் நம்ம தோனி.