#2019 இந்தாண்டு சர்ச்சையில் சிக்கிய திரைப்படங்களின் பட்டியல்!
  • 12:40PM Mar 12,2020 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:40PM Mar 12,2020 Chennai

இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 20 நாட்களே உள்ளது, கடந்த 2018-ம் ஆண்டுத் திரைப்பட ரசிகர்களின் பொன்னான ஆண்டு என்றே கூறலாம், 96, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற அற்புதமான திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் இந்தாண்டு கொஞ்சம் குறைவான திரைப்படங்களே வெற்றிநடை போட்டன. அதிலும் சில சர்ச்சையில் சிக்கி தவித்தன. இந்தாண்டு ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி தோல்வியும் அடைந்துள்ளன. இந்த ஆண்டுப் பெரும் எதிர்பார்ப்புடன் சர்ச்சையைச் சந்தித்து வெளியாகிய திரைப்படங்கள் சிலவற்றின் பட்டியலை காணலாம்.

Image result for oviya in 96 ml

#1 ஓவியா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய திரைப்படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கத்தில் வெளியாகிய இந்தத் திரைப்படம் ஏடாகூடமான வசனங்களாலும், பெண்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, உறவு வைத்துக் கொள்வது போன்ற காட்சிகளிலும் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.

#2 இந்தாண்டு அமலா பால் நடிப்பில் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடை. புரட்சி என்ற பெயரில் நிர்வாணமாக நடித்த அமலா பால் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்தார். திரைப்படமும் வெளியாவதில் பல பிரச்சனைகளைச் சம்பாதித்தது.

#3 அண்மைக்காலமாக விஜய் திரைப்படங்கள் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகின்றன. இந்தாண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் கதை திருட்டு, படப் போஸ்டரில் விஜய் கறி வெட்டும் கட்டையின் மீது செருப்புக்காலை வைத்தது போன்ற பிரச்சனையில் சிக்கியது.

#4 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சுட்டிக்காட்டும் வசனத்தில் பிரச்சனையில் சிக்கியது.

#5 அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமான ஆதித்ய வர்மா சிலபல காதல் கட்சிகளால் பிரச்சனையில் சிக்கின.

 

#2019 இந்தத் திரைப்படங்கள் மட்டுமின்றிச் சில நடிகர்கள் கூடப் பிரச்சனையில் சிக்கினர், முக்கியமாகத் தமிழகத்தில் சின்மயியால் ஆரம்பிக்கப்பட்ட மீடு பிரச்சனை, திரைப்படத் தயாரிப்பாளர் பிரச்சனை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top