#Motivation: தளர்வாக உணர்கிறீர்களா? இதை கேளுங்க! தமிழில் உள்ள பெஸ்ட் மோட்டிவேஷனல் பாடல்கள்
  • 00:01AM Apr 20,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 00:01AM Apr 20,2019 Chennai

நம்மில் பலர் தளர்வாக இருக்கும் போது, நமக்கு பெரும்பாலான நேரத்தில் கம்பெனி கொடுப்பது motivational songs தான். மனிதர்கள் நம்மை ஊக்கப்படுத்த மறந்தாலும் மெல்லிசை பாடல்கள் நம்மை மறந்தது இல்லை.அப்படி சோர்வாக இருக்கும் போது, ஊக்கப்படுத்தும் பாடலை கேட்பதைவிடுத்து, சோகப்பாடலை கேட்பது மேலும் தளர்வை ஏற்படுத்தும்.சரி அந்த வகையில் ஒரு சில கருத்துள்ள பாடல்களின் லிஸ்ட் உங்களுக்காக..

1. நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் தேவை இல்லை" எனும் பாடலை கேட்டிருப்போம்.ஏதோ சோகப்பாடல் என நினைக்கவேண்டாம்.இதில் ஆயிரம் கருத்துக்கள் நிறைந்துள்ளது.அத்தனையும் அற்புத வரிகள்.காதலிக்கு திருமணமாகி அவளது கணவருக்காக, காதலன் எடுத்த ரிஸ்க் தான் படத்தின் கருத்துரு..என்ன ரிஸ்க் என்பதை தெரிந்துகொள்ள படத்தை பாருங்க..நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..

2. கோலிசோடா படத்தில் "ஜனனம் ஜனனம்" பாடல்.வீடு ,வாசல் என அடையாளத்தையே இழந்த பின்னரும் மீண்டும் உறுதியோடு எப்படி அடுத்த கட்டத்திற்கு முன் செல்வது என அழகாக கூறியிருக்கும் பாடல் வரிகள்

3. சேரன் பாண்டியன் படத்தில் "சின்ன தங்கம் செல்ல தங்கம் ஏன் கண்கலங்குது பாடல்" இதன் வரிகள் கேட்போருக்கு எழுதப்பட்டது போலவே அமைந்திருக்கும்,

4. நான் படத்தில் இடம்பெற்ற "உலகினில் மிக உயரம்" பாடல்.சோர்ந்து கிடப்போருக்கும் உற்சாகம் பிறக்கும்.

5. 7ஆம் அறிவு படத்தில், "இன்னும் என்ன தோழா" பாடல். அதன் வரிகள் எக்காலத்தவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

Motivation: மனிதன் அழுத்தமாக உணரும் போது, துவண்டு போனது போல உணரும் போது பல வழிகளில் மனதை ரிலாக்ஸ் செய்ய பாடல்களே முன் நிற்கிறது.

Top