#Women Power : மாதம் ரூ 25 இலட்சம் வருமானம் ஈட்டும் சாதனை பெண் !!!
  • 09:10AM Oct 09,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 09:10AM Oct 09,2019 Chennai

இன்றைய நவீன உலகில் முகநூல் மற்றும் வாட்ஸாப் மூலமாக பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துள்ளனர் ஆனால் தொழில் நுட்பத்தை நல்ல முறையில் பயன் படுத்தினால் அதன் மூலம் வாழ்க்கையை நல்ல முறையில் வருமானம் ஈட்டலாம் என்பதை ஒரு பெண் நிரூபித்துள்ளார் அவரைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்  போகிறோம்

sanmuga priya 1.jpg

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ்ஆப் அதிகமாக பயன்படுத்துகிறோம் அதில் நாம் அதிகமாக குட் மார்னிங் குட் நைட் என்று ஒரு வெட்டியாக தான் அதனை பயன் படுத்துகிறோம் அனால் அதே வாட்ஸ்ஆப் மூலம் புடவை வியாபாரத்தில் மாதம் 25 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார்  சென்னையைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் ,முதுநிலை சமூகவியல் படித்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 75,000 ரூபாய் சம்பளத்தில் மனிதவள மேம்பாட்டு (HR )அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்

sanmuga priya 3.jpeg

திருமணமான சண்முக பிரியாவின் கணவர்  டெல்லியில் பணிபுரிகிறார் இவரது குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை மோசம் அடைந்ததால் வேறு வழியின்றி தனது HR  பணியை ராஜினாமா செய்தார் சண்முகப்பிரியா. கணவரும் அருகில் இல்லாமல் குழந்தைக்கும் உடல்நிலை சரியில்லாமல் தனிமையில் இருந்த சண்முகப்பிரியா மன உளைச்சலுக்கு ஆளானார் அதனால் ஒரு மன மாற்றம் மற்றும்  வருமானத்திற்காவும்  வாட்ஸ்ஆப் மூலம் புடவை வியாபாரம் செய்ய முடிவு எடுத்து தற்போது 25 வாட்ஸ் அப்  குரூப் மூலம் தான் வியாபாரம் செய்யும் புடவைகளை விளம்பரப்படுத்தி சம்பாதித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த தொழிலில் உள்ள பிரச்சனைகள் பற்றி தெரியாததல் மிகுந்த அவதிக்குள்ளான சண்முகபிரியா, முதலில் குறைந்த லாபத்தில் துணி விற்றுவந்தார்.

sanmuga priya 2.jpeg

சில சமயம் வாடிக்கையாளர்கள் துணி வாங்காமல் தேங்கியதால் சில நஷ்டங்களையும்  சந்தித்துள்ளார். பின்னர் வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்களுக்கு தான் வைத்திருக்கும் டிசைன்களை படம்பிடித்து அனுப்பியுள்ளார். பின்னர் அவர்கள் ஆர்டர் செய்ய கொரியர் மூலம் துணி அனுப்பி வியாபாரத்தை பெருக்கினார்.தற்போது மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் சண்முகப்பிரியா 3000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top