Timeless

இந்த ஓவியத்தை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத ஒரு ஆச்சர்யம்! இதை கேட்டு சிரிப்பதா இல்லை சிந்திப்பதா என்பதை நீங்களே சொல்லுங்களேன்

Apr 22 2021 08:27:00 AM

உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். லியனார்டோ டாவின்சி வரைந்த இந்த ஓவியம் பல நூற்றாண்டுகளை கடந்தும் அனைவரையும் ஆச்சார்யப்படுத்தி வருகிறது. இந்த ஓவியமானது பிரான்சில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் எந்த காலநிலையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு இதனை பாதுகாத்து வருகின்றனர்.

monalisa-art

மோனலிசா ஓவியத்தை பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று சமீபத்தில் தெரிய வந்தது. 1987ம் ஆண்டில் ஓவியத்தில் உள்ள மோனலிசா சிரிக்கிறாரா இல்லையா என்று மிகப்பெரிய விவாதமே எழுந்தது. இந்த விவாதத்திற்கு தீர்வு காண்பதற்காக ஒரு மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு அந்த ஓவியத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

monalisa-art

ஓவியத்தை ஆராய்ந்த மருத்துவர்கள் மோனாலிசாவுக்கு பெல்ஸ் பால்சி என்ற ஒருவிதமான நரம்பு நோய் இருப்பதாக கூறினர். இதன் காரணமாகவே அவருடைய முக தசைகள் பாதிக்கப்பட்டு சிரிப்பது போல தோன்றுவதாக தெரிவித்தனர். இதுமட்டுமல்லாமல் அவருடைய இடது கண் சிறியதாகவும், வாய் மேல் இழுத்துக்கொண்டு இருப்பதாகவும், காதுகளுக்கு பின்பக்கத்தில் நரம்பு புடைத்திருக்கிறது என்றும் கூறினர். ஒரு ஓவியத்தை மருத்துவ பரிசோதனை செய்து இப்படியெல்லாம் சொல்ல முடியுமா? இதைப்பற்றி கேட்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை என்னாலும் புரிந்துகொள்ள முடிகிறது மக்களே. உங்கள் மனதில் தோன்றும் அதேதான் என் மனதிலும் தோன்றுகிறது.