Timeless

நம்ம இருக்குற சைசுக்கு இதெல்லாம் தேவையா என்று நினைச்சிருப்பாங்களோ? பக்கத்துல இருக்கவங்க கொஞ்சம் பார்த்து செய்யுங்க!

Jun 06 2021 08:59:00 AM

நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் உலகில் சில நாடுகள் ராணுவம் என்ற ஒன்றை வைத்துக்கொள்ளாமலேயே இருக்கின்றன. அப்படி ஒரு நாடு தான் மொனாக்கோ. இது ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு ஆகும். வாடிகன் சிட்டியை போல இதுவும் மிகச்சிறிய நிலப்பரப்பை கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது. மொனாக்கோவின் பரப்பளவு வெறும் 202 ஹெக்டர் மட்டுமே. நிலத்தில் இந்த நாட்டின் எல்லையானது 5.47 கிலோமீட்டர் தூரம் வரை தான் உள்ளது.

monaco-city

இந்த நாட்டின் கடற்கரையும் மிகச்சிறியதாகவே காணப்படுகிறது. உலகில் மிகச்சிறிய கடற்கரை பரப்பை கொண்டிருக்கும் மொனாக்கோவில் 3.83 கிலோமீட்டர் நீளத்திற்கு மட்டுமே கடல் பரப்பு இருக்கிறது. இது சிறிய நாடாக இருக்கும் காரணத்தினால் இங்கு ராணுவத்திற்கு தேவையில்லாமல் போனதா என்று நமக்கு நினைக்க தோன்றுகிறது. பிரான்ஸ் நாட்டின் மேற்பார்வையில் இந்த நாடு இருக்கிறது. இந்த நாட்டுக்கு தேவையான பாதுகாப்பை பிரான்ஸ் வழங்கி வருகிறது.

monaco-city

இந்த நாட்டுக்காக இரண்டு சிறிய ராணுவப்படைகளை பிரத்யேகமாக பிரான்சு அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நாடு மிகவும் சிறிய நிலப்பரப்பை கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப சிறிய ராணுவப்படை வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த படையில் இருக்கும் வீரர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள போலீஸ் படையை இந்த நாடு பயன்படுத்திக்கொள்கிறது.

monaco-city