#Mom With Child: 'அவ நல்லா அனுபவிக்கட்டும்' இது அம்மாவின் சித்து விளையாட்டு - ஒரு தலைமுறையே காக்கும் நுணுக்கம்.!
  • 21:34PM Jun 08,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 21:34PM Jun 08,2019 Tamil Nadu

சரியான வெயில். ஒரு கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார் தோழி பூமா. அப்போது வெகு தூரத்தில் இருந்து ஏதோ கிராமத்தில் இருந்து வந்தவர்கள் போல இரண்டு பெண்கள். தாயும் மகளும் அவர் அருகில் வந்து நிற்கின்றனர். மகள் சிறுமி எனச் சொல்ல முடியாவிட்டாலும், பள்ளிப் படிப்பு படித்து வருபவள் போலத் தோற்றம். அம்மா மகளிடம் என்ன வேணும்னு கேட்டக மகள் ஜூஸ் கடைகாரரிடம் ஒரு மிக்ஸ்டு ஃப்ரூட் ஜூஸ் கொடுங்க என்று கூறியிருக்கிறார்.

கடைக்காரர் கொண்டு வந்ததும் ஒரு வாய் குடித்த மகள் 'நீ குடி என தாயிடம் நீட்ட அவர் எனக்கு வேண்டாம். 'எப்ப நா ஜுஸ் குடிச்சிருக்கேன்' என்று தீவிரமாக மறுத்தாள். ஒரு டம்ளர் ஜுஸ் குடித்து முடிப்பதற்குள் நான்கைந்து தடவை இப்படி நடந்தது. தோழி பூமாவுக்கு சட்டென ஒரு விஷயம் புலப்பட்டது.

அவர் இப்போது பொரியல் அவ்வளவாக விரும்பி சாப்பிட மாட்டார். எப்போதுமேவா என்றால் இல்லை, சிறு பெண்ணாக இருந்த வரை விரும்பி உண்பார்.கல்லூரி படிக்கும் போதும் தான். திருமணம் ஆன பின்னரும் தான். பின் எப்போதிலிருந்து சாப்பிடவில்லை எனப்பார்த்தால் எப்போ அவரது  குழந்தை வெண்டைக்காய்,உருளைக்கிழங்கு,எண்ணை கத்தரிக்காய், என விரும்பி உண்ண ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து இந்த மாற்றம்.

எங்கே குழந்தைக்கு இல்லாமல் போய் விடுமோ என்ற பயம் தான் அவரை பொரியலை தியாகம் செய்ய வைத்தது. கடைக்காரர் நினைத்திருக்கக் கூடும் என்னம்மா இப்படி அடம் பிடிக்கிற, உங்க மகள் அத்தனை சொல்ல ஒரு தடவை வாங்கி குடித்தால் தான் என்ன என்று. ஆனால் தோழி பூமாவுக்கு புரிந்திருக்கிறது. மகளுக்கு பிடிச்சிருக்குல்ல அவ நல்லா அனுபவிக்கட்டும் என்று அம்மா ஜூஸ் குடிக்கும் ஆசையை மனதால் விட்டு விலகி விட்டார் என்று. இது தியாகம் அல்ல, ஒரு சமூகம் அழிந்து விடாது காக்கப்பட, இயற்கையின் சித்து விளையாட்டு. இந்த மாதிரி பல வாழ்க்கை பாடங்களை ஒவ்வொருவர் அனுபவத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.

 

Share This Story

முருகானந்தம்

Top