Misc

வெறும் பத்தாயிரம் இருந்தால் போதும், ஒரே நாளில் பத்துலட்சம் வரை எடுத்துவிடலாம்! கொடுப்பவர்கள் ஒரு ரூபாய் குறைச்சு கொடுத்தாலும், சட்டைய புடுச்சு கேட்கலாம்!

Oct 17 2020 12:29:28 PM

புதுக்கோட்டை,சிவகங்கை பக்கம் மிகவும் பிரபலமான மொய் விருந்து பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெறும் பத்தாயிரம் வைத்து மொய் விருந்து ஏற்பாடு செய்தால், அவர்களது செல்வாக்கிற்கு ஏற்ற வகையில் குறைந்த பட்சம் பத்து லட்சம் வரை வரவு கைக்கு வருமாம். நல்லா இருக்கே, பத்தாயிரம் போட்டு பத்து லட்சம் எடுக்கலாம் என நீங்க நினைத்தால் அது தவறு. யார் யாரெல்லாம் எவ்வளவு செய்தார்கள் என்பதை சரியாக மொய் நோட்டில் எழுதி வைத்துக்கொண்டு, ஒரு ரூபாய் கூட குறையாமல் திரும்ப வைக்க வேண்டும்.

moi-virundhu tamil-celebration

சாதாரண மொய் விருந்து செய்ய என்னவெல்லாம் தேவை என்பதை பார்ப்போம். கொழுகொழுவென உள்ள ஆடுகள், ஆடு இல்லை. கோழி எல்லாம் சைட் டிஷ்ஷிற்காக மட்டுமே! ஆடு எல்லாம் முடியாது, கோழி தான் எங்க வசதி என சொன்னால் குறைவான மதிப்பு தானாம். ஆடு, கோழி இருப்பதெல்லாம் பார்த்து தான் மொய்யே சிலர் வைப்பார்கள். இலையில் இவையெல்லாம் குறைவாக இருந்தால், 'காதல்' படத்தில் ஹீரோயின் வயது வந்த சீருக்கு பீஸ் குறைவாக உள்ளதென அடித்து கொள்வார்களே பார்த்துள்ளீர்களா? அதுதான் நடக்கும். 

moi-virundhu tamil-celebration

கோவில் விழாக்களில் கட்டியிருப்பது போல பெரிய லவுட் ஸ்பீக்கர் (மொய் விருந்து வைத்தவரின் பெயரை ஊருக்கே கேட்கும்படி சொல்ல வேண்டும், மிஸ் ஆச்சு பிறகு எல்லாமே கைகலப்பில் தான் முடியும்) விருந்து முடிந்த பின் மஞ்சப்பை கொடுக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் என்றால் அதில் நோட்புக் மற்றும் பேனா போட்டு கொடுப்பார்கள். 

moi-virundhu tamil-celebration

நேரடியாக கேஸாக கொடுக்க முடியாதவர்களுக்கு இப்போது பேடிம் வசதியும் உண்டு. சில வருடங்களுக்கு முன்னர் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் மொய் விருந்து வைக்க வேண்டும். அதுவும் ஒரே நாளில் இரு குடும்பங்கள் வைக்க கூடாது. 

moi-virundhu tamil-celebration

மொய் விருந்து மூலம் வரும் பணம் கண்டிப்பாக அந்த ஆண்டில் அந்த குடும்பத்திற்கு உண்டான பெரிய செலவுகளை (வீடு கட்ட, திருமணம் செய்ய) எல்லாம் பூர்த்தி செய்ய உதவலாம். இதற்கு வட்டியும் கிடையாது. அடுத்து யாராவது மொய் விருந்து வைத்தால் மட்டுமே, திரும்ப வைக்க வேண்டும். இப்படி பல நன்மைகளை சொல்லலாம். இருப்பினும் பணம் படைத்தவர்கள் அள்ளி கொடுப்பார்கள், இல்லாதவர்களின் நிலை தான் மொய் விருந்தில் பரிதாபம்.