Misc

உங்கள் மொபைல் போன் ஒட்டுகேட்கப்படுகிறது! நம்பமுடியவில்லை என்றால் இதை செய்து பாருங்கள்!

Sep 15 2021 11:53:00 AM

சமீப காலமாக தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது பரவலாக பேசப்படும் பிரச்சனையாகிவிட்டது. அதிலும் இந்த பிரச்சனையின் தீவிரம் உலக அளவில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனால் நமக்கென்ன? என்று அலட்சியமாக இருக்கும் போது தான் டிஜிட்டல் திருட்டுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. அதாவது தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் அரங்கேறி வரும் திருட்டுக்கள் யாவும் தொழில்நுட்பத்தின் உதவியோடு தான் அரங்கேறி வருகிறது. அதிலும் இந்த டிஜிட்டல் திருடர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக இளம் சமுதாயத்தின் இன்றைய வாழ்க்கை முறைகளை குறிவைக்கும் இவர்கள் மிகவும் சாமர்த்தியம்  மிக்கவர்களாக உள்ளனர்.

mobile-phone safe-use hacking-problems

அது சரி விசயத்துக்கு வருவோம். அதாவது நம்மை முன்பின் தெரியாத ஒரு நபர் நம்மிடம் இருந்து நமது தகவல்களை திருடுகிறார் என்றால், அது எப்படி சாத்தியம்? உண்மையில் உங்களிடம் திருடுபவருக்கு உங்களை பற்றிய அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்கும். நான் யாரிடமும் சொல்லவில்லையே? பிறகு எப்படி என்கிறீர்களா, நீங்கள் நேரடியாக சொல்லவில்லை. ஆனால் மறைமுகமாக நீங்கள் சொல்வதை கேக்க வாய்ப்புகள் உள்ளது.

mobile-phone safe-use hacking-problems

உங்களுடைய பர்சனல் மொபைல் போன் மூலம் நீங்கள் பேசுவதை இன்னொருவர் கேட்க வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. உங்கள் ரகசியங்கள் மட்டுமல்லாமல், அந்தரங்க அரட்டைகளும் பதிவு செய்யப்படலாம். இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இரும்பு திரை படத்தில் வரும் அர்ஜுன் கதாபாத்திரம் செய்யும் விஷயங்கள் அனைத்தையும் நிஜத்திலும் செய்யக்கூடிய நபர்கள் நம் உலகில் இருக்கின்றனர்.

mobile-phone safe-use hacking-problems

என்னிடம் தான் திருட ஏதும் இல்லையே என்று கேட்கிறீர்களா? இப்படிப்பட்ட டிஜிட்டல் திருடர்களுக்கு கிடைக்கும் சிறு தகவல்கள் கூட பெரிய பொக்கிஷம் ஆகும். அதாவது உங்களின் சிறு ரகசியங்கள் கூட அவர்களால் பெரிய அளவில் உபயோகப்படுத்தப்படும் ஆயுதமாக மாறலாம். உங்களின் பண பரிவர்த்தனைகளை விட, உங்கள் தனிப்பட்ட ரகசியங்களும் அந்தரங்க அரட்டைகளும் இன்னும் அவர்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

mobile-phone safe-use hacking-problems

இது பற்றி தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருக்கும் எனது நண்பரோடு பேசும்போது அவர் கூறிய  சில தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும், அதிகம் பயனுள்ளதாகவும் இருந்தது. உங்கள் போனில் *#62# என்று டைப் செய்யும்போது, பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டால் உங்கள் அழைப்புகளை மற்றவரும் கேட்க வாய்ப்புகள் உள்ளதாம். அதாவது இதன் மூலம், உங்கள் அழைப்புகள் (calls) குரல் (Voice), தரவு (Data), எஸ்எம்எஸ் (SMS) போன்றவை உங்களுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டதா அல்லது திசைதிருப்பப்பட்டதா என்பதை நீங்கள் அறியலாம்.

mobile-phone safe-use hacking-problems

*#21# இந்த USSD குறியீட்டை டயல் செய்வதன் மூலம், உங்கள் அழைப்புகள் வேறு எங்காவது திருப்பி விடப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஒருவேளை தகவல்கள் பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டால், கவலை வேண்டாம் ##002# இந்த யுஎஸ்எஸ்டி குறியீட்டை டயல் செய்தால் உங்கள் குரல் அழைப்பு அல்லது தரவு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தால் அவை அழிக்கப்படும். என்று அவர் தெரிவிக்கவே, உடனடியாக எனது மொபைலை எடுத்து சோதித்து பார்த்தேன். நல்லவேளை அப்படி ஒன்றும் இல்லை.