முரட்டுப் பீசும், பைத்தியக்காரனும்…
  • 09:08AM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 09:08AM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

       எப்படி இருக்கீங்க… ஏற்கெனவே ரெண்டு சொந்த சம்பவத்தை எழுதியிருக்கேன்.  அதனால என்னைத் தெரிஞ்சிருக்கும்னு ஒரு சின்ன நம்பிக்கைதான்.  ஏற்கெனவே சொன்ன மாதிரி கோவில் காளை மாதிரி தின்னுட்டு ஊரைச் சுத்தறது, சில்லுண்டித்தனம் பன்றது, கிடைக்கிற கேப்ல தண்ணியைப் போட்டுட்டு தகராறு பன்றது இல்லாட்டு தகராறு ஆனதால தண்ணியைப் போடுறதுன்னு வாழ்க்கை சுவாரஸ்யமாத்தான் ஓடிட்டிருந்துச்சு… ஊரு வேற கொஞ்சம் சின்ன ஊரா, நம்ம வண்டி சத்தம் கேட்டாலே பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க.. சும்மா இருக்கிறவனுக்கே அடங்காம ஆடும், இப்படி இருந்தா என்னாகும்??? அப்படி ஒரு கெத்தா, திமிரா பசங்களோட ஊரைச் சுத்திட்டிருந்தப்போத்தான் ஒரு சம்பவம் நடந்துச்சு…

       நாம பன்றதுதான் முரட்டு வேலையே ஒழிய, ஓரமா நாம தப்பு பன்றோமோன்னு உறுத்திட்டேதான் இருந்துச்சு.  அதனால, அடிக்கடி புண்ணியம் வேணும்னு வாண்டடா சில நல்ல காரியம் பன்றதும் உண்டு.  எங்க ஊர்ல 17-20 வருஷம் முன்னாடி பொறந்த நிறையப் பசங்களுக்கு என் பேரைத்தான் வச்சிருப்பாங்க.  கவெர்மென்ட் ஆஸ்பத்திரில சிசேரியன் பண்ண வேண்டிய பொம்பிளைங்களுக்கு இரத்தம் வேணும்னா மொத போன் எனக்குத்தான் வரும்.  நர்ஸக்கா என் பிரெண்டோட அம்மாங்கிறதால முதல்ல தற்செயலா கேட்டாங்க, அதையே நான் ரெகுலராக்கிட்டேன்.  எனக்குத் தெரிஞ்சு நான் ப்ளட் பேங்க்ல ரெண்டு வாட்டிதான் இரத்தம் குடுத்திருக்கேன்.  ஆனா, இப்படி தர்மாஸ்பத்திரில குடுத்தது ஜாஸ்தி.  இரத்தம் குடுத்துட்டு வெளியே வரும்போது, கட்டாயப்படுத்தி அந்தப் பொண்ணோட புருஷனோ, அம்மாவோ ஒரு டீ வாங்கிக் குடுக்கும்… அந்த நர்ஸக்காதான் திட்டிகிட்டே இருக்கும், இவ்ளோ நல்ல பசங்க அடிதடி மட்டும் விட்ருங்கடான்னு… ஏன்னா, எவனையாச்சும் அடிச்சு இரத்த காயம் ஆயிடுச்சுன்னா அவனையும் அங்கதான் தூக்கிட்டு வருவோம்…

       அந்தக்கா ஒரு வாட்டி ரொம்ப அட்வைஸ் பண்ண, திமிருல என்னை எவனும் அடிக்க முடியாதுன்னு கெத்து காட்டிட்டு வந்துட்டேன்.  டீக்கடைல டீ சாப்டிட்ருக்கும் போது ஒரு பைத்தியக்காரன் ட்ரெஸ்ஸெல்லாம் கிழிஞ்சு போய் டீ கடையாண்ட வர, டீக்கடைக்காரன் அவனை விரட்டறான்.  ஒரு வயசான பாய் அதைப் பார்த்துட்டு பக்கத்துல நின்ன என்கிட்ட இவனைப் பார்த்துக்கோன்னு சொல்லிட்டு பக்கத்து தெருவுல ஓடிட்டாரு. திரும்ப வந்த அவரு கைல ஒரு பழைய வேட்டி, அவனுக்கு அதைக் கட்டி விட்டு அவனுக்கும் சேர்த்து டீ சொல்ல – நான் குடுத்துடறேன்னு சொல்லிட்டு வந்திட்டேன்.  ரெண்டு மூணு நாளா மனசை அரிச்சுகிட்டே இருந்துச்சு… ஏன்னா, அந்த பாய் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை… அவருக்கே சோத்துக்கு டன்டனக்காதான்… நம்ம நேரம் அன்னைக்கு கவெர்மென்ட் ஆஸ்பத்திரிகிட்ட ஒருத்தன் இதே மாதிரி திரிய, நானும் அவசரமா வீட்டு ஓடி வந்து ரொம்ப பழசாகாத ஒரு பேண்ட், டீ சர்ட்டை கொண்டு வந்து அவனுக்கு போட ட்ரை பண்ணினேன். 

       பேன்ட்ல கை வச்சதும் விட்டான் பாருங்க ஒரு அறை, பொறி கலங்கிப் போச்சு. நர்ஸக்கா என்னைப் பார்த்து சிரிச்சுகிட்டே வெளிய வர்றாங்க… கையெல்லாம் பரபரங்குது… பைத்தியக்காரன்கிட்ட என்னத்தை பண்ண… என்னவோ சொன்ன, அடிக்க ஆளில்லைன்னு – இப்போ என்ன பண்ணப் போறேன்னு கேட்டுச்சு… அதான் சொல்றேன், இருந்தா ரௌடியாயிரு, இல்லாட்டி இரக்கமிருக்கிறவனா இரு… ரெண்டுக்கும் நடுவுல சீன் போடாதன்னு சொல்லிச்சு… நர்ஸக்கா என்னாண்ட பேசிட்டே அவனாண்டை போய், கொஞ்சி மாத்த வச்சிட்டாங்க…  அப்போ உள்ளுக்குள்ள விழுந்த ஏதோ ஒண்ணுதான், எங்கம்மா என்னாண்ட சத்தியம் கேட்கிறப்போ வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.  ஏது எப்படியோ இப்பக் கூட அந்தப் பைத்தியத்தையும், அவனோட அறையையும் மறக்க முடியாது.  ஏன்னா, அப்படியே என் வாழ்க்கையைப் பொரட்டிப் போட்ருச்சுல்ல.. என்ன, நாஞ்சொல்றது???                

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top