#NATURALREMEDY: வாழையடி வாழையாக என்று சும்மாவா சொன்னாங்க??? பழம், பூவில் உள்ள மருத்துவப் பயன்கள்!!!
  • 13:49PM Oct 14,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 13:49PM Oct 14,2019 Chennai

வாழையடி வாழையாக என்ற வாழ்த்தை நாம் நிறையக் கேட்டிருக்கலாம். சுபகாரியங்கள் என்றால் வாழை மரம் இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு நாம் மரியாதை கொடுக்கும் அளவுக்கு அப்படி வாழையில் என்னதான் இருக்கிறது??? வாழைப்பழம் மற்றும் வாழைப்பூவில் என்னவெல்லாம் இருக்கிறதென்று பார்க்கலாமா???

#1. ஆப்பிள் பழத்துடன் ஒப்பிடுகையில், வாழையில் 4 மடங்கு PROTEIN, 2 மடங்கு மாவுச்சத்து, 3 மடங்கு PHOSPOROUS, 5 மடங்கு VITAMIN, MINERAL-கள் உள்ளன.

#2. வாழைப்பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல், சீதபேதி, மார்பக புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் உணவு மண்டல கோளாறுகள் வராமல் தடுக்க முடியும்.

#3. வாழைப்பழத்தில், TRYPTOPHAN என்ற PROTEIN இருப்பதால், உடலுக்குச் சுறுசுறுப்பும், மனதிற்கு நிம்மதியும் அளிக்க வல்லது.

#4. பல் சம்பந்தமான எல்லா வகை கோளாறுகளுக்கும், செவ்வாழைப் பழம் சிறந்த நிவாரணம். உடல் சூட்டைத் தணிக்கப் பூவன், ரஸ்தாளி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

#5. வாழைப்பூ நம் உணவில் சுவையைக் கொடுப்பதுடன் உடலுக்குத் தேவையான பல்வேறு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்கிறது.

#6. இதில் உயிர்ச்சத்துக்கான VITAMIN A, B, C, CALCIUM, IRON, POTASSIUM, PHOSPOROUS ஆகிய MINERAL SALT-கள், FIBRE-க்குத் தேவையான AMINO ACID-கள் உள்ளன.

#7. சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக கோளாறு, மூச்சுக்குழாய் கோளாறு, அதிக உடல் பருமன், மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், மலச்சிக்கல் ஆகிய நோய்கள், வாழைப்பூவைத் தொடர்ந்து உண்பதன் மூலம் குணமாகும்.

#8. ரத்தப்போக்கு உள்ள பெண்களுக்கு இதைப் பதார்த்தமாகச் செய்து கொடுப்பதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

#9. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Eye Care Home Remedy  |  Hair Growth Remedies  |  Home Based Wound Medicine  |  Headache Remedies  |  Aloe Vera Remedies  |

#NATURALREMEDY இந்தியாவில், வாழைக்காயை மற்ற காய்கறிகள் போல் சமைத்துச் சாப்பிடுகின்றனர். மொந்தன், நேந்திரம், சாம்பல் நிற மொந்தன், வயல் வாழை ஆகிய ரகங்கள், காயாக உபயோகப்படுத்தலாம். வாழைக்காயில் இருந்து தயாரிக்கப்படும் பொடி, எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. இதைச் சிறு குழந்தைகளுக்குச் சத்துமாவு போன்ற இணை உணவில் கலந்து கொடுத்தால் உடனடி சக்தியை கிடைக்கச் செய்யும். நிஜமாகவே அற்புதமானது வாழை என்றால் மறுப்பேது???

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top