Misc

அது என்ன மில்க் கிரேட் சவால்? இதை ஏன் தடை செய்யணும்ன்னு போராட்டம் பண்ணுறாங்க!

Oct 07 2021 02:00:00 PM

இளைஞர்கள் என்றாலே ஜாலி, சந்தோசம் கொண்டாட்டம் என்று இருப்பவர்கள் என நம்ம எல்லோருக்கும் தெரியும். அதுவும் அமெரிக்கா இளைஞர்கள் சும்மா இருப்பாங்களா? ஏதாச்சும் புதுசு புதுசா விளையாட்டு கண்டுபிடிச்சு விளையாண்டுக்கிட்டு இருப்பாங்க. அந்த வகையில் இப்போ ஒரு புது விளையாட்டு கண்டுபிடிச்சுருக்காங்க.

milk crate challenge america

நம்ம ஊரில் இந்த பால் பாக்கெட் எல்லாம் வைக்கறதுக்கு ஒரு பெரிய பாக்ஸ் இருக்குமே. அந்த பாக்ஸ் எல்லாம் எடுத்து வரிசையா ஒரு பிரமீடு போல அடுக்கி வைக்கிறாங்க. அந்த பாக்ஸ் எல்லாம் ஒரு பிரமீடு மாதிரி மாறிய பின்னர் அந்த பிரமிட்டின் மீது ஏறி உயரத்திற்கு செல்கின்றனர். அந்த உயரத்தில் யார் நின்றாலும் கண்டிப்பாக நிலையாக நிற்க முடியாது.

milk crate challenge america

அப்போது அவர்கள் நிலை தடுமாறி கீழே விழும்போது குரங்கு போல சாகசம் செய்கிறார்கள். இந்த சாகசத்தை செய்யும்போது சிலருக்கு மண்டை உடைந்து கை, கால் உடையும் அளவிற்கு காயம் ஏற்படுகிறது. சிலருக்கு உள்காயம், சிலருக்கு வெளிக்காயம். அதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சில அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க, நாங்க கீழே விழுந்து மண்டைய உடைச்சுக்கறதை யாராலும் தடுக்க முடியாது என்று எப்பவும் போல இளைஞர்கள் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

milk crate challenge america