#Plastic நீங்கள் சாப்பிடும் ருசியான உணவில் 10 சதவீதம் பிளாஸ்டிக் உள்ளது! பயப்படாம படிங்க!
  • 19:28PM Oct 27,2019 Asia
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 19:28PM Oct 27,2019 Asia

பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று எவ்வளவு விழிப்புணர்வுகள், சட்டங்கள் வந்தாலும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தினந்தினம் ஒரு பிளாஸ்டிக் குப்பையை வீசி செல்கிறீர்களா? உங்கள் கவனத்திற்கு ஒன்று கூறுகிறேன், நீங்கள் குப்பையாகத் தூக்கிவீசிய பிளாஸ்டிக்கை இப்போது உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் உணவுடன் கலந்து உண்கிறீர்கள்! நீங்கள் சுவையாக ருசித்துச் சாப்பிடும் ஃபிரெஞ்ச் ஃபிரை முதல் தயிர் சாதம் வரை அனைத்திலும் பிளாஸ்டிக் உள்ளது! கேட்கவே பயமாக இல்லை?

#milkpeda: இந்த மூன்று பொருள் இருந்தால் போதும் அரைமணிநேரத்தில் பால் பேடா ரெடி!

Image result for plastic in ocean

தென் கொரியாவின் Incheon University-யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாம் தினமும் பயன்படுத்தும் உப்பில் Microplastics இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த microplastics என்பது நாம் கடலில் வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்நீரில் ஊரி உடையும் போது சிறுதுண்டுகளாகச் சிதறும் பிளாஸ்டிக் தான். இவை ஏற்கனவே நாம் வாங்கிக்குடிக்கும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் குழாய்களில் வரும் தண்ணிரில் கலந்திருக்கும். தற்போது இவை மேலும் ஒரு விதத்தில் நாம் சுவைக்காகப் பயன்படுத்தும் உப்பில் கலந்து வருகிறது!

Image result for salt

இதற்கு முன்பு நாம் சாப்பிடும் மீன் வகைகளில் இந்த microplastics கலந்திருப்பதாகக் கூறிவந்தனர், இந்நிலையில் தற்போது நாம் கலந்து சாப்பிடும் உப்பிலும் இப்படிப் பிளாஸ்டிக் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது! மேலும் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியாக உலகம் முழுக்க விற்கப்படும் 39 உப்புப் பிராண்டில் 90 சதவீத மிசிரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதாக இந்த ஆராய்ச்சி குழுவினர் கூறுகின்றனர். இதில் ஆசிய கண்டத்தில் விற்கப்படும் உப்புப் பிராண்டுகளில் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். எடுத்துக்காட்டுக்கு ஒரு இந்தோனேசியாவை சேர்ந்தவர் தினமும் எடுத்துக்கொள்ளும் உப்பில் 10 கிராம் microplastics இருப்பதாகக் கூறுகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top