Exquisite

உங்களை ஆட்டிப்படைத்த இந்த பொம்மையை மறக்க முடியுமா ? அன்னபெல் பொம்மையை விட மேலான அசத்தலான வரலாறு கொண்டது இது

Apr 08 2021 08:25:00 PM

கார்ட்டூன் பிடிக்காத குழந்தைகளை எங்காவது பார்க்க முடியுமா? அந்த கார்ட்டூன் வரிசையில் உயிரற்ற ஒன்றாக இருந்தாலும் செயற்கையான கற்பனை உருவமாக இருந்தாலும் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த மிக்கி மவுஸ் நமது நெருங்கிய நண்பனாக நம் மனதிலும் உணர்விலும் கலந்திருந்தது.

micky-mouse

இந்த மிக்கி மவுசை உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி. கார்ட்டூன் என்ற கேலிச்சித்திரம் மீது அதிக ஆர்வம் கொண்டவர் டிஸ்னி. படிப்பில் அதிக ஆர்வம் இல்லாத அவர் பல்வேறு விதமான விலங்குகளின் ஓவியத்தை வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். தான் வரையும் சிறு ஓவியங்களை விற்று காசாக்கி பிழைப்பு நடத்தினார். பல்வேறு பத்திரிகைகளுக்காக கார்ட்டூன் வரைந்து கொடுத்தார். அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இடையே போர் நடந்த காலத்தில் தனது கார்ட்டூன் மூலம் அதை மக்களுக்கு தெரியப்படுத்தினார்.

micky-mouse

அவருடைய பல கார்ட்டூன்கள் மக்களை ஈர்க்காமல் தோல்வியில் தான் சென்று முடிந்தது. இருப்பினும் மனம் தளராமல் வித்தியாசமான ஒரு எலியை வரைந்தார். அதற்கு மிக்கி மவுஸ் என்று அவருடைய மனைவி பெயர் வைத்தார். இந்த மிக்கி மவுஸ் தான் அவருடைய வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. இது மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதன் பின்னர் தான் அனைவராலும் புகழப்படும் பெரிய மனிதராக வால்ட் டிஸ்னி உயர்ந்தார். தொடர் தோல்விகளால் மனம் நொந்து ரயிலில் பயணித்து கொண்டிருந்த போது அவர் கிறுக்கிய ஓவியம் தான் இந்த மிக்கி மவுஸ்.