#Banana : என்னது.... ஒரு வாழைப்பழம் 85 லட்சமா....!!!
  • 13:09PM Apr 02,2020 Miami
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 13:09PM Apr 02,2020 Miami

அமெரிக்க நாட்டில் உள்ள மியாமியில்  கலை கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் பல்வேறு கலைப்படைப்புகள்  காட்சிப்படுத்தப்பட்டன  ,அந்த கலை படைப்புகளில் சுவரில் ஒரு வாழைப்பழம் டேப் கொண்டு ஒட்டப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது,ஏன் அவ்வாறு வாழைப்பழத்தை சுவற்றில் டேப் கொண்டு ஒட்டப்பட்டுள்ளது என்ற கேள்வியே அனைவரையும் கவரக் காரணமாக இருந்தது,இதனை பார்த்த ஒருவர் சுமார் $120000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலமெடுத்தார் அது இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாயாகும்,ஒரு வாழைப்பழம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போன சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வாழைப்பழத்தை சுவற்றில் ஓட்டியவர் இத்தாலிய கலைஞரான மௌரிஷியோ என்பவராவார் இவர்  தனது வித்தியாச படைப்புகள் மூலம்  உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இந்த முறை ஒரு சாதாரண வாழைப்பழத்தை தன் படைப்புக்கு பயன்படுத்திய மௌரிஷியோ, அதை மியாமியில் ஒரு ஹோட்டல் அறையில் நடத்த கண்காட்சியில் வாழைப்பழத்தை டேப் கொண்டு சுவற்றில் ஒட்டி வைத்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top