JAMES BOND ஸ்டைலில் பிரதமரை காப்பாற்றிய MI AGENCY.
  • 08:02AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 08:02AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

MI5.jpg

லண்டன்: I.S. அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட பயங்கரவாதிகள் சிலர் அந்நாட்டின் பிரதமர் தெரசா மே அவர்களைக் கொலை செய்யப் போட்ட திட்டத்தை அந்நாட்டின்  உளவுத்துறையான MI5 அதிரடியாகத் தடுத்துள்ளது.  

லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் தெரசா மே நுழையும் வேளையில் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம் தாக்குதல் நடத்தி கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர். பல நாட்களாகப்  பயங்கரவாதிகளை கண்காணித்ததின் மூலம்  MI5 இந்தச் சதியை கண்டுபிடித்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுத்துள்ளனர்.

MI5 2.jpg

இது தொடர்பாக, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ்,  ஜகாரியா ரஹ்மான் ,அகிப் இம்ரான் ஆகியோர் கடந்த நவ.,28 ல் கைது செய்யப்பட்டனர். அவர்களை இன்று வெஸ்ட்மின்ஸ்டர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தைச் சேர்த்து இந்த ஆண்டில்  மட்டும் பயங்கரவாதிகளின்  9 சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது.

Top