Timeless

மாயன்களால் உருவாக்கப்பட்ட நகரம் ஒன்று இருப்பது குறித்து உங்களுக்கு தெரியுமா ?

Apr 12 2021 06:51:00 PM

மனித குலம் தோன்றிய நாள் முதல் பல்வேறு நாகரீகங்களும் கலாச்சாரங்களும் தோன்றி வருகின்றன. இன்னமும் உலகம் முழுவதும் பேசப்படக்கூடிய கலாச்சாரம் என்றால் அது மாயன் காலத்து கலாச்சாரம் ஆகும். அனைத்து துறைகளிலும் திறமை மிக்கவர்களாக இருந்த மாயன்கள் காலப்போக்கில் அழிந்து போயிருந்தாலும் அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நகரம் இப்போது பல்வேறு சிறப்புகளை தன்னிடத்தே கொண்டிருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும்.

mexico-maayan-city

மெக்சிகோவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று இஸ்மால். இந்த நகரத்தை அற்புத நகரம் என்று கூட அழைக்கலாம். இந்த நகரத்தை சுற்றி அமைந்துள்ள கட்டடங்கள் யாவும் பெரும்பாலும் மஞ்சள் நிறத்திலேயே காணப்படுகின்றது. இதனால் இந்த நகரம் பளிச்சிடும் தோற்றத்தை பெற்றிருக்கிறது.

mexico-maayan-city

இந்த நகரத்தில் 15000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரமானது 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த மாயன் காலத்தில் உருவாகியுள்ளது. மாயன் கடவுளான இட்ஸாம்னா இந்த நகரத்தை நிறுவினார் என்று கூறப்படுகிறது. அவருடைய பெயரை இந்த நகரத்திற்கு சூட்டினார்கள். காலப்போக்கில் அது இஸ்மால் என்று அழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்த நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது