மெர்சலும் அரசியலும்...
  • 06:57AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 06:57AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India

மெர்சல் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.படத்தைப் பற்றிப் பல விதமாக விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும்  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் யாரும் எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடந்து வருகிறது.

Image result for mersal posters

நான் சிறு வயதில் கேள்விப்பட்டிருக்கிறேன் பாட்ஷா திரைப்படம் வெளிவந்த போது ரஜினியின் புகழ் எப்படி உச்சத்திற்குச் சென்றார்  என்று.இந்தப் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைப் பார்த்தால் அவர் கூடிய விரைவில் அத்தகைய இடத்திற்குச் சென்று விடுவார் என்று தோன்றுகிறது. இந்தப் படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது படத்தில் சில பொது விஷயங்களைத் துணிச்சலுடன் பயமின்றி கூறியிருக்கின்றனர் என்று தோன்றியது.

Related image

படத்தில் GST மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பற்றி  பல விஷயங்களைக் கூறியுள்ளனர். இந்தக் காரணத்தால் பல எதிர்ப்புகள் வருவதை எண்ணி நான் சற்று அதிர்ச்சியடைந்தேன்.ஒரு படத்தில் கூறப்படும் ஒரு கருத்தை எதிர்த்து தேசிய கட்சி ஒன்று பிரச்சினை செய்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தியா கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்று வெளியே கூறினால் மட்டும் போதாது,கூறும் கருத்தில் உள்ள உண்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.படத்தில் தங்களுடைய  கருத்தைக் கூறினால் போதும் அரசியலில் நுழைவதற்கான செயல் என்று முத்திரை குத்திவிட்டு ஊடகங்கள் விவாத மேடை அமைத்துக் கருத்து தெரிவிக்கத் தொடங்கிவிடுகின்றனர். படத்தில் கூறப்பட்ட பல கருத்துக்கள் சாமானிய மக்களின் கேள்வி தான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை என்றே தோன்றுகிறது.

https://pbs.twimg.com/media/DMvel2eW0AEBHk0.jpg

இதை விட ஒரு கொடுமை இத்தனை நாட்கள் விஜய் என்று அழைக்கப்பட்டவர் திடீரென்று ஜோசப் விஜய் என்று குறிப்பிடப்படுகிறார்.இது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் காரணத்தினாலே மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.மேலும் படத்தை இணையதளத்தில் தான் பார்த்தேன் என்று H.ராஜா கூறியுள்ளார்.படத்தை விமர்சிப்பதே தவறு இதில் இணையதளத்தில் பார்த்தேன் என்று கூறி படத்தை எதிர்த்தால் இவரைப் பற்றி என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

Image result for fans celebration on mersal

பிரச்சினையே இல்லாத ஒரு விஷயத்தை ஊடகமும் அரசியல்வாதிகளும் பெரிது படுத்துகின்றனர்.எது நடந்த இன்று பல தடைகளைத் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்கு தமிழக மக்களிடம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் ஆதரவு வந்துகொண்டே இருக்கிறது. எது நடந்தாலும் சரி தமிழக மக்களிடம் பெரிய அங்கீகாரத்தை மெர்சல் திரைப்படம் பெற்றுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற வேண்டிய ஒரு படத்தை இந்தியா முழுவதும் சென்றடைய செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top