Exquisite

தினுசு தினுசா யோசிக்கிறாங்களே நம்ம ஆளுங்க! உக்காந்து யோசிச்சாங்களா இல்லை நின்னுகிட்டு யோசிச்சாங்களா தெரியலையே

Apr 19 2021 09:55:00 AM

அயன் படத்தில் வருவது போல இப்போதெல்லாம் நம்ம ஆளுங்க எல்லாம் செம்ம உஷாரா திருடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் சில சமயங்களில் எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளவும் செய்கிறார்கள். அப்படி ஒரு திருட்டு சம்பவம் சமீபத்தில் கேரள விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

melted-gold

கண்ணூரை சேர்ந்த ஒருவர் மாம்பழச்சாற்றில் தங்கத்தை கலந்து கடத்தி வந்துள்ளார். இதற்காக தங்கத்தை திரவ வடிவத்தில் மாற்றி பழச்சாற்றில் கலந்து எடுத்து வந்துள்ளார். இப்படி மொத்தமாக 2.50 கிலோ தங்கத்தை அவர் எடுத்து வந்துள்ளது விமான நிலைய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

melted-gold

இந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேலே இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு ஜாலியாக மாம்பழச்சாற்றில் கலந்து தங்கத்தை எடுத்து வந்திருந்தாலும் நம்ம ஆளு எப்படியோ கடைசியில் மாட்டிக்கொண்டான். வித்தியாசமாக யோசித்தாலும் எல்லா நேரங்களிலும் அதிர்ஷ்டம் கைகொடுப்பதில்லை. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பது போல தவறு செய்தவன் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை இந்த சம்பவம் நினைவு படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.