5 மாத கருவிற்கு அறுவை சிசிக்சை..??ஆப்ரேஷன் முடிந்து மீண்டும் கருவுக்குள் ..!! அப்போ இரண்டு பிறந்தநாள் கொண்டாடுவார்களா ?
  • 16:58PM Apr 16,2019 United States
  • Written By AP
  • Written By AP
  • 16:58PM Apr 16,2019 United States

மருத்துவ துறையில் மிகப்பெரிய மிராக்கல் நிகழ்ந்துள்ளது. 26 வயதுடைய பெண்ணின் 5 மாதமே ஆன கருவிற்கு ஸ்பைனா பிபிடா குறைபாடு உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த குறைப்பாடு உள்ள குழந்தையின் முதுகெலும்பு வளர்ச்சி பெறாமல் இருக்கும் இதனால் அந்த குழந்தைக்கு நடப்பதில் பிரச்சனை ஏற்படக்கூடும்..

20 வார இறுதியில் குழந்தையை ஸ்கேன் செய்த போது, குழந்தையின் தலை சரியாக வளர்ச்சி அடையாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது..இந்த ஸ்பைனா பிபிடா குறைபாடு இருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் 80% அபாஷன் செய்யவே பரிந்துரைத்துள்ளனர்..

அபாஷன் செய்ய பெற்றோர் மறுக்கவே, மருத்துவர்கள் மாற்று சிந்தனையாக கரு அறுவை சிகிச்சையை கூறியுயுள்ளனர்.குழந்தையை தாயின் வயிற்றில் இருந்து எடுத்து,குறைபாட்டை சரிசெய்த பின்னர் மீண்டும் கருவிற்குள் வைத்து விடுகின்றனர்..இதனால் மீண்டும் பிறக்கும் குழந்தை தனது இயல்பு வாழ்க்கையை வாழ முடிகிறது,முன்னர் இந்த குறைபாடு இருப்பின் அபாஷன் செய்யவே பரிந்துரைத்துள்ளனர் மருத்துவர்கள் , தற்போது இந்த சிகிச்சை வெற்றி அடைந்ததை அடுத்து இந்த முறையை பரிந்துரைப்பதாக கூறுகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top