#Management Study : MBA படித்தால் சிறந்த பிஸினஸ் மேன் ஆகிவிடலாமா..? அப்பாவித்தனமாக ஏமாறும் மாணவர்கள்.!
  • 19:13PM Jul 04,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 19:13PM Jul 04,2019 India

MBA படிப்பு படித்தால் சிறந்த பிஸினஸ் மேன் ஆகிவிடலாமா? என்ற கேள்விக்கு மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்ற வர்த்தக ஆலோசகர் பிரபு கூறிய தகவல்கள் திடுக்கிட வைக்கிறது. 2009 ஆம் ஆண்டிலிருந்து 10 வருடங்களுக்கு மேல் மேலாண்மைப் படிப்புகளை ஆராய்ச்சி செய்து, முடிவில் நடைமுறை மேலாண்மைப் பாடத்திட்டத்தை "Experts' Management of Business Aspects ( Experts'/MBA)" என்ற பெயரில் அவரது மாணவர்களுக்குக் கொடுத்து வருகிறார்.

இன்று கல்லூரிகளில் உள்ள மேலாண்மை படிப்புகளின் (BBA, MBA) பெயரில், ஒரு தொழிலை மேலாண்மை (Manage) செய்ய இந்தப் படிப்பை கட்டாயமாக்கி, இளைஞர்களைப் படிக்க வைத்து, அந்த திணிக்கப்பட்ட கருத்துக்களைத் தாண்டி அவர்களை புதிய கண்ணோட்டத்தில் சிந்திக்க விடாத கார்பரேட் நிறுவனங்களின் தந்திரத்தை ஒவ்வொரு தொழில் முனைவோரும் அறிந்து கொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தை எப்படி பதிவு செய்து, நிறுவன உரிமைகள் வாங்கி எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று,100 -இல் ஒரு MBA படித்த மாணவனுக்குத் தெரிந்தாலும் அது அதிசயமே. தொழிலின் ஆரம்பமே எப்படி என்று கற்றுக் கொடுக்காத ஒரு படிப்புதான் ஒரு தொழிலை மேலாண்மை செய்ய நமக்குக் கற்றுக் கொடுக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.

இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த தொழில் வணிக மேலாண்மைப் பாடத்திட்டம் உலகம் முழுதும் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தைக் (Syllabus) கொண்டது. மேலாண்மை பாடங்களில் படிக்கும் Case Study, Strategical Planning, Business Analysis, Marketing agendas, Trading Manners என அனைத்தும் ஏதோ ஒரு கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட மாடல்கள். இந்த மாடல்களை புத்தகங்களாக வடிவமைத்து நமது சிந்தனைக்குள் திணித்து, அந்த மாடல்களின் Transmitter-களான நம் இளைஞர்களை, புதிய கண்ணோட்டத்துடன் முன்னேறும் தொழில்களில் மேலாண்மை என்ற பெயரில் நுழைத்து, அந்தத் தொழிலை நிறுவிய திறமையான அனுபவஸ்தர்களை, எக்காரணத்தைக் கொண்டும் கார்பரேட் வணிகத்தின் ஆணி வேறாக இருக்கும் பல வியாபார உக்திகளை சிந்திக்கவும் செயல்படுத்தவும் விடாமல் பார்த்துக் கொள்கிறது.

ஒரு MBA படித்த மாணவனை விட, உலகளாவிய அனுபவ தொழில் அறிவு கொண்ட ஒருவரின் வியாபார நுணுக்கங்கள், உலகம் முழுதும் தன் வசப்படுத்தி வரும் Amazon, Google, Walmart, Woolworths போன்ற பில்லியன்களில் புரளும் நிறுவனங்களின் சந்தைப் படுத்துதல் நுணுக்கங்களை ஒத்திருக்கின்றன.நீங்கள் ஒரு மிகச்சிறிய, சாதரண தொழில் துறையில்கூட மிகப் பெரும் வெற்றி பெற வேண்டுமானால், தற்கால சந்தையை அனுபவ அறிவால் மேலாண்மை செய்யக் கற்று கொண்டு தொழில் தொடங்குவதோ அல்லது அனுபவ அறிவால் அணுகும் ஒரு நபரை மேலாண்மை செய்ய வைப்பதே சாலச்சிறந்து. | AUSTRALIA-வில் படிக்க ஆசையா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top