Lushgreen

இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரம் எங்குள்ளது தெரியுமா? மாந்தரீகத்தால் ஒரு ஊரையே கட்டுக்குள் வைத்திருக்கும் மந்திரவாதிகளின் சாதுர்யம்!

Oct 11 2021 05:27:00 PM

பில்லி, சூனியம், செய்வினை போன்ற விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகவும் குறைவான நபர்கள் தான். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் நீங்க அதைப்பத்தி தெரிந்துகொள்ள இந்தியாவின் மயோங் கிராமத்துக்கு செல்ல வேண்டும். அசாமில் உள்ள இந்த கிராமம் தான் இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

mayong-village assam-india

இந்த கிராமம் இவ்வாறு அழைக்கப்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. பில்லி சூனியம் போன்ற விஷயங்களை செய்யும் நூற்றுக்கணக்கான மந்திரவாதிகள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களை நேரில் சென்று சந்தித்தால் பில்லி சூனியம் குறித்த உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ளலாம். மாந்தரீகத்தில் கைதேர்ந்த இந்த மந்திரவாதிகளால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்று இந்த கிராமத்தில் வாழும் பொதுமக்கள் நம்புகின்றனர்.

mayong-village assam-india

மந்திரவாதிகள் என்றாலே கெட்டவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். பில்லி சூனியம் போன்ற விஷயங்கள் தீய சக்திகளின் விளைவாக ஏற்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும் அதை சரிசெய்வதற்கும் சில மந்திர தந்திரங்கள் தேவைப்படுகிறது. எனவே எல்லா மந்திரவாதிகளையும் மோசடி செய்பவர்கள் என்று முத்திரை குத்திவிடாதீங்க.

mayong-village assam-india

மயோங் கிராமத்தில் இருக்கும் மந்திரவாதிகள் பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளனர். இதற்கு காரணம் இவர்களுடைய மூதாதையர்கள் எல்லாம் மகாபாரத காலத்தில் தொடர்புடையவர்களாக உள்ளனர். மகாபாரதப்போரில் இந்த கிராமமும் முக்கிய பங்காற்றியுள்ளது. இதிகாசத்தில் மந்திர சக்திகளுடன் கூடிய சண்டைகள் நடந்தது நமக்கு தெரியும். எனவே அப்போதிருந்தே இந்த கிராமத்தில் மந்திர தந்திரங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.

mayong-village assam-india

மனிதர்களை மறையச்செய்வது, மனிதர்களை விலங்காக மாற்றுவது போன்ற வித்தைகள் எல்லாம் இங்கிருப்பவர்களால் செய்ய முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இந்த வித்தைகள் அனைத்தும் அந்தக்காலத்தில் எளிதில் சாத்தியமானது. இப்போது இதெல்லாம் நடக்குமா என்பது நமக்கு குழப்பமாகவே உள்ளது.