Highrise

மூளையை கசக்கிப்பிழிய தயாரா இருக்கீங்களா? 18 வருஷத்துக்கு முன்னாடி முடிஞ்சு போன கணக்கு பரீட்சை மீண்டும் வந்தால் என்ன செய்வீங்க?

Sep 14 2021 06:48:00 PM

பரீட்சை என்றவுடன் பயந்து விடாதீங்க நண்பர்களே. கொரோனா காலத்துல எல்லாரையும் ஆல் பாஸ் என சொல்லிட்டாங்க. அப்போ இது வேற என்ன பரீட்சையாக இருக்கும் என்று ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை. ஆனால் மூளையை கசக்கி பிழிஞ்சுதான் ஆகணும். அதுல இருந்து மட்டும் தப்பிக்க முடியாது.

matrix-4 december-2021

என்னடா பொடி வச்சி பேசுறானே என்று உங்க மனசுல தோணுதா? ஆமாங்க சாதாரண விஷயத்தை பத்தி பேசுவதென்றால் எந்த அலப்பறையும் செய்யத்தேவையில்லை. ஒரு சூப்பரான விஷயத்தை பத்தி பேசும்போது அதுக்கு கொஞ்சமாவது பில்டப் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

matrix-4 december-2021

நீங்க 80 அல்லது 90 களில் பிறந்தவர்கள் என்றால் நான் சொல்லப்போகும் விஷயம் உங்களை மெய்மறக்க செய்து விடும். ஹாலிவுட் படங்களில் பலவிதம் இருக்கு. அதுல முக்கியமான ஒரு வகை தான் சயின்ஸ் பிக்ஷன். அறிவியல் நுட்பங்களை கிராபிக்ஸ் காட்சிகளோடு இணைத்து உருவாக்கப்படும் படங்களைத்தான் சயின்ஸ் பிக்ஷன் படம் என்று சொல்லுவாங்க.

matrix-4 december-2021

ஹாலிவுட்டில் எப்போதும் ஆக்ஷன் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் படங்களுக்கு தனி மரியாதை உள்ளது. அந்த ஆக்ஷன் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் இரண்டையும் ஒன்றிணைத்து உலகம் முழுவதையும் புரட்டிப்போட்ட ஒரு திரைப்படம் தான் மேட்ரிக்ஸ். இந்தப்பட வரிசையில் இதுவரை மூன்று திரைப்படங்கள் வந்துள்ளன. மூன்றுமே பட்டையை கிளப்பி வசூல் சாதனை புரிந்த படங்கள் ஆகும்.

matrix-4 december-2021

புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான கதை என்றாலும் இந்தப்படம் அனைவரையும் மீண்டும் மீண்டும் பார்க்கவைக்கும் திறன் படைத்தது. இந்தப்படத்தை நான் மூன்று முறை பார்த்தபிறகே அதன் அறிவியல் கருத்துகள் ஓரளவுக்கு எனக்கு புரிந்தது. எனவே கொஞ்சமாவது மண்டையில் மசாலா இருந்தால் மட்டுமே இந்தப்படத்தின் கதையை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

matrix-4 december-2021

1999ம் ஆண்டு இந்தப்படத்தின் முதல் பாகமும் 2003ம் ஆண்டில் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகமும் வெளியானது. இப்போது 18 வருடங்கள் கழித்து படத்தின் நான்காம் பாகம் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப்படத்தின் ட்ரைலர் வெளியானதை பார்த்து ஒரு நிமிடம் அப்படியே நான் உ றைந்துபோய் விட்டேன். அந்த அளவுக்கு சண்டை காட்சிகள் மிரட்டும் விதத்தில் இருக்கிறது.

matrix-4 december-2021

படத்தின் மூன்று பாகத்திலும் நாயகனாக நடித்த கீனு ரீவ்ஸ் நான்காவது பாகத்திலும் நாயகனாக தொடர்கிறார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முந்தைய மூன்று பாகங்களை பார்க்காதவங்க டிசம்பர் மாதத்துக்குள் பாத்துக்கோங்க. எதையும் பார்க்காம நான்காம் பாகத்தை பார்த்தீங்கன்னா உங்க மண்டை கண்டிப்பா வெடிச்சிடும்.