Highrise

செவ்வாய் கிரகத்தில் இதுவரை யாரும் கண்டிராத ஒரு அதிசயம் ! அட்டகாசமான காட்சியால் உற்சாகத்தில் கொண்டாடும் விஞ்ஞானிகள்

Apr 08 2021 05:37:00 PM

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இல்லை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும் அங்கு நீர் இல்லாமல் வானவில் போன்ற தோற்றம் உருவாகிறது என்று கூறினால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா ? ஆம் செவ்வாய் கிரகத்தில் வானவில் போன்ற வடிவம் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mars-rainbow

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ரோவரை அனுப்பியது. அது அங்கு சென்று தரையிறங்கி அங்கிருந்து சில புகைப்படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பியுள்ளது. அந்த புகைப்படத்தில் வானவில் போன்று தோற்றமளிக்கும் ஒரு புகைப்படமும் இருந்தது. பூமியை போல செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் கிடையாது. அப்படி இருக்கும் போது எப்படி வானவில் தோன்ற முடியும் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அது வானவில் கிடையாது என்று நாசா விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

mars-rainbow

வறண்ட பிரதேசமான செவ்வாயில் புழுதி அதிகமாக இருக்கும் என்பதால் அது டஸ்ட்போவாக இருக்கலாம் என்று கருதுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தூசிகளில் சூரிய ஒளி படுவதினால் இப்படி வானவில் போன்ற தோற்றம் உருவாகியிருக்கலாம் என்பது அவர்களின் முடிவான கருத்தாக உள்ளது.