#astrology: ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்!! மூலநட்சத்திர திருமணம் தடைக்கு காரணம்? காதல் திருமணத்தின் விந்தை!
  • 09:28AM Oct 14,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 09:28AM Oct 14,2019 Chennai

மூல நட்சத்திரம் கொண்டவர்கள் திருமணம பொருத்தம் பார்க்க சென்றாலே, ' ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்' என்ற ஒரு ஜோதிட பழமொழி எப்படியாவது நம் காதில் புகுந்துவிடும். மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம் என தெறித்து ஓடுவார்கள்.அதற்கு மேல் அந்த ஜாதககாரர் பேரழகியாக இருந்தாலும் திரும்பி பார்க்க மாட்டார்கள்.ஏனெனில்  மூல நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் மணமகன் தன் பெற்றோரில் ஒருவரை  இழக்க நேரிடும் என்ற  நம்பிக்கை காரணமாகவே மூலநட்சத்திரம் கொண்ட நபர்களுக்கு திருமணம் நடக்க காலம் தாமதமாகிறது..

ஆனால் நேர்மறையான அம்சமே  இவர்களுக்கு மேலோங்கியுள்ளது. கல்வி கடவுளான சரஸ்வதி தேவி பிறந்த நட்சத்திரமும்  மூலம் தான் என்பது பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மூல நட்ச்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சிறு வயது முதலே மிகவும் புத்திசாலியாகவும்  கொஞ்சம் அதிகமாகவே துடுக்கு தன்மையுடன் இருப்பார்கள். இவர்களது இந்த புத்திகூர்மை  அவர்கள் திருமணம் முடிந்தும் அப்படியே தொடரும்.வீட்டு விவகாரங்களில் வரவு செலவு,முடிவு எடுத்தல் போன்ற தலைமை பண்புகளை ஏற்கும்படி செய்யும் இந்த மூலநட்சத்திரம். 

கணவர் வேண்டுமானால் மனைவியது ஆளுமையையும் அறிவுக்கூர்மையையும் கண்டு வியந்து அப்படியே ஏற்று கொள்வார்.ஆனால்  மாமனார்  மாமியாரால் ஆரம்பத்தில் இதை ஏற்று கொள்ள முடியாது,தேவையற்ற வம்புகளை இழுத்துவிடும். தொடர்ந்து சண்டைகள் வந்துகொண்டே இருக்கும். அதனாலே நம் முன்னோர்கள் ஜோதிடம் மூலம் அப்படி சொல்லிவைத்துள்ளனர். ஆனால் அத்தனை ஜோதிட கட்டுப்பாடுகளும் காதல் கல்யாணம் எனும் போது காணாமல் போகிறது..ஜாதக தோஷம் காரணமாக 30 வயதானாலும் சிலருக்கு திருமணமாவதில்லை,ஆனால் காதல் திருமணம் ஜோதிட கட்டுப்பாடுகள் மட்டுமின்றி சமூகத்தில் நிலவும் அத்தனை கட்டுபாடுகளையும் தகர்த்து விடுகிறது. #adamantchild: -குழந்தைகள் என்ன அடம்பிடித்தாலும் தயவு செய்து இந்த பொம்மையை மட்டும் வாங்கி கொடுத்து விடாதீர்கள்?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top