துணி மாத்துற அப்ப கூட இருக்கனுமா..? ததும்பும் தாம்பத்தியம்.. புஷ் என்று போவது ஏன்..?
  • 14:21PM Apr 13,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:21PM Apr 13,2019 Tamil Nadu

''ஏன்டி கட்ன புருஷன்தானே இருக்கேன். நீ டிரெஸ் சேஞ்ச் பண்றப்போ நாங்க இருந்தா இன்னா கேடு. ரூமை விட்டு போய்த்தான் ஆகணுமா?''

''யப்பா சாமி..உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா? மரியாதையா வெளியே கிளம்பு, திருப்பி திருப்பி நம்மாள குளிச்சிகிட்டு இருக்க முடியாது''

பல ஆண்டுகள் கழித்து சீனே அடியோட மாறும்..

''ஏன்டி ஆம்பளை ஒருத்தன் தடிமாடு மாதிரி ரூம்ல இருக்கேன், கொஞ்சம்கூட வெவஸ்தையே இல்லாம நீ பாட்டுக்கு வந்து கடகடன்னு டிரெஸ் சேஞ்ச் பண்றே?''

''த்தோடா..க்கூம்.. பார்த்து அப்படியே கண்ணு கூசிட்டாலும், ஒடனே துள்ளி விளையாடிட்டுத்தான் மறுவேலை பாப்பாரு..

 

இப்படித்தான் வாழ்க்கை,ஒவ்வொரு விஷயத்திலும் கலர்ஃபுல்லா ஆரம்பித்து கடைசியில்.. எப்படி யோ மாறிப்போய்க்கிட்டிருக்கும்' என்று பத்திரிக்கையாளர் ஏழுமலை எழுதும், ''புதைந்துபோகும் நிஜங்கள்'' நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி வாழ்வின் பல எதார்த்தமான விசயங்களை நகைச்சுவையோடு கூறுவதில் வல்லவர். இவரின் பல படைப்புகள் இணையதளங்களிலும், சமூக வலைதள பக்கத்திலும் நிரம்பி காணக்கிடைக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ் ஆர்வலர் ஒருவர் பல முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், சில நல்ல நகைச்சுவைகளை பேஸ் புக்கில் படிக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஒரே நாளில் ஒரே படைப்பை பலர் பதிவில் பார்க்கும் போதும் அதே நகைச்சுவை அந்த வார பிரபல வார இதழில் பார்க்கும் போது இன்னும் பேஜாராகிப்போகின்றது. இதே போலவே பல நல்ல கட்டுரைகள் பேஸ்புக்கில் நிலைத்தகவலில் பார்த்தவை சில ப்ளாக்குகளிலும் அப்படியே காணக்கிடைக்கின்றது. மூலவர் யார் உற்சவர் யார் என்பது தெரியாமலேயே போய்விடுகின்றது. இந்தப்பிரச்சினைகளில் யாரும் தங்கள் படைப்பு காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிப்பதும் காணக்கிடைக்கவில்லை என்று தமிழ் செயற்பாட்டாளர் கீழை கதிர் வேல் கூறியுள்ளார்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top