#Marriage Invitation : கல்யாண பத்திரிக்கையிலேயே அடித்து தூள் கிளப்பிய மாப்பிள்ளை - நா அதுதான் : இனி கெத்தா வெளியில சொல்லுங்க.!
  • 14:53PM Jun 07,2019 Salem
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:53PM Jun 07,2019 Salem

முன்ன எல்லாம் பையனுக்கு பொண்ண கொடுக்கணும்னா காடு,தோட்டம் இருக்கானு கேப்பாங்க. ஓரளவுக்கு படிச்சிருந்தாலே போதும், பையன் நல்லா வசதியா இருந்தா கட்டி கொடுத்துருவாங்க. இப்ப எல்லாம் காடு, தோட்டம் வெச்சு இருக்கனுமாமா, ஆனா பையன் விவசாயம் பண்ண கூடாது, ஏதாவது ஒரு ஐ.டி கம்பெனில வேலைல இருக்கணும்னு கேக்கறாங்க. அதெப்படீங்க ஒத்துக்க முடியும். தோட்டம் வேணும்னு கேக்கராங்க சரி. தோட்டத்த வெச்சுருக்க பையன் விவசாயம் பண்ண கூடாதா..? பையன் விவசாயம் பண்றாங்கனு சொன்னா மேலையும், கீழையும் பாக்கறாங்க.

வருஷம் முழுசா மாங்கு மாங்குனு அடுத்தவனுக்கு கை கட்டி உழைச்சு கொடுக்கற வேலைய பெருசா பாப்பாங்க. அதே யாருக்கும் பணிஞ்சு போகாம சொந்த காலுல நிக்குற விவசாய வேலை பாக்குறாங்கனு சொன்னா மொறச்சு பாக்குறாங்க. ஒன்னு மட்டும் அவங்களுக்கு புரிய மாட்டங்குது. ஐ.டி வேலைல வருசத்துக்கு 5 லட்சம் சம்பளம் வருதுனா, அத விடவே அதிகமா விவசாயத்துல இலாபம் பார்க்க முடியும். நிறைய பேரு MBA படிச்சுட்டு விவசாயத்துல இறங்கி கைநிறைய சம்பாரிச்சிட்டு இருக்காங்க. எதுவுமே முறையா பண்ணா அதுல ஈசியா ஜெயிச்சிரலாம்.

ஆனா நம்ம மக்களுக்கு இருக்கற பயமும், தயக்கமும் தான் விவசாயத்த சந்தேக பார்வையோட பார்க்க வைக்குது. அந்த மாய முகமூடிய உடச்சுட்டு நான் விவசாயி தான். என் கல்யாண பத்திரிக்கைல என் வேலை 'விவசாயம்'ன்னு தான் போடுவேன்னு ஒரு வைராக்கியதோட போட்ருக்காரு சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்ராஜன். சேலம் மாவட்டம் தென்செட்டியந்தலை சேர்ந்த அரங்கநாதன் என்பவரது மகன் சுந்தர்ராஜன். இவருக்கும் சேலம் ஆத்தூர், சிறுவாச்சூர் பொன்னுசாமி என்பவரது மகள் சுமதிக்கும் சமீபத்துல திருமணம் நடந்துருக்கு.

எல்லாரும் மாதிரி இல்லாம வித்தியாசமான முறையில இவங்க திருமணம் நடந்துருக்கு. முதல்ல தன்னோட கல்யாண பத்திரிக்கைல தான் ஒரு விவசாயினு கெத்தா போட்ருக்காரு. அடுத்து தமிழ் முறைப்படி மாப்பிள்ளை வீட்டுலையே  தாலி கட்டி திருமணம் நடந்துருக்கு. அதுவும் திருமணம் அவரோட விவசாய நிலத்துல அமைக்கப்பட்ட மேடையில தான் நடந்துருக்கு. இன்னைக்கு எத்தனையோ திருமணம் இலட்சம், இலட்சமா செலவு பண்ணி மண்டபத்துல வெச்சு. ஒரே நாள்ல வாழ்க்கை முழுசும் சம்பாரிச்ச பணத்த ஒரே நாள்ல பல பேரு செலவு பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்கள போல இல்லாம இவங்க மேற்கொண்ட முயற்சி எல்லாருக்கும் ஒரு முன்னுதாரனமா அமைய போகுது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top