#marriageexpectations: வயது ஏற ஏற ஆண்கள் திருமண எதிர்பார்ப்புகளை தளர்த்தி கொள்ள காரணம் ?? பெண் கிடைத்தாலே போதும் என்ற மனநிலைக்கு ஏன் வருகின்றனர்?
  • 11:40AM Oct 15,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 11:40AM Oct 15,2019 Chennai

வயது ஏற ஏற எவ்வளவு பெரிய ஆணழகனாக இருந்தாலும் ஏதோ ஓர் பெண் கிடைத்தால்  போதும் என்ற மன நிலைக்கு வந்துவிடுகின்றனர். முதலில் பெரும்பாலும் தனது  தகுதிக்கு மீறிய  ஓர்  எதிர்பார்ப்பு,  பின் எதிர்பார்ப்புக்கேற்றது கிடைக்காது என்பதை காலம் மெல்ல மெல்ல உணர்த்தும், வயது ஏறுமுகமாக இருக்க, எதிர்பார்ப்பு இறங்குமுகமாக குறைந்துகொண்டே போகும். கடைசியில் வாழ்க்கையில் துணையின் இன்றியமையாமை புரியும். அப்போது அழகு பணம் எல்லாம் வாழ்க்கையின் இரண்டாம் பட்சமாக தெரியும்.இந்த எதார்த்தத்தை சுற்றம் புரியவைத்துவிடுகிறது.  

வயது ஆக ஆக மனிதருக்கு ஒரு துணையின் அன்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. இன்ப,துன்பங்களை  பகிர்ந்து கொள்ள, இத்தனை காலமாக தேக்கி வைத்த காதலை வெளிக்கொணர ,  காலையில் எழுந்தவு டன் சிரிப்போடு அன்பாக நமக்காக மட்டும் ஒருவர் இருந்தால்?? இத்தனை தேடல்களில்ஆரம்பத்தில் எதிர்பார்த்த தேவைற்ற எதிர்பார்ப்புகள் தொலைந்து போகும்."வீடு வரை உறவு சுடுகாடு வரை மனைவி" என சும்மாவா சொன்னார் கண்ணதாசன்.   

வயது ஏற ஏற நமக்கென ஒரு குடும்பம், தன்னை புரிந்துகொள்ள ஒரு பெண் இருந்தால் மட்டுமே போதுமானது. சுற்றங்களுக்காக  சீர்வரிசை, அழகு , நகை , வசதி எல்லாம் வேண்டாம்.காதல் இருந்தால் போதும் என்ற எண்ணம் உதயமாகும். அதுவே பக்குவமடைதல்...இந்த பக்குவம் வர முதல் காரணமாக  சொந்தங்கள் மற்றும்  நண்பர்கள் அமைந்துவிடுகிறார்கள். அவர்களது திருமண வாழ்வில் நிகழும் , மனக்கசப்பு, அன்பு ,சண்டை   என அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றின் ரிசல்டாக நல்ல பெண் கிடைத்தால் போதும், தேவைற்ற எதிர்பார்ப்பிற்கும் அன்பான திருமண வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை  என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.  #astrology: ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்!! மூலநட்சத்திர திருமணம் தடைக்கு காரணம்? காதல் திருமணத்தின் விந்தை!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top