#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்!
  • 12:48PM Sep 19,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:48PM Sep 19,2019 Tamil Nadu

சோசியல் மீடியா பக்கம் போனாலே, இந்த படம் எப்படியாவது கண்ணுல பட்டுரும். லாவண்யாவின் 10 கட்டளைகள் என்று திருமனத்திற்கு அடித்துள்ள பேனர் தான் இத்தனை பரபரப்புக்கும் காரணம். கல்யாணத்துக்கு முன்னாடி, பெண்ணுக்கு தான் ஏகப்பட்ட கண்டீசன் போடுவாங்க. ஆனா இப்போ மணப்பெண், மாப்பிள்ளைக்கு போட்ட கண்டிசன் பாத்து ஆடி போயிருக்காங்க பலரும். மாப்பிளைக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த நிலமைனா, கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என்ன கதியோ.? என்று புலம்பி பதிவிட்டு வருகின்றனர். அப்படி என்ன தான் கண்டிசன் போட்டாங்கனு அடுத்து பார்க்கலாம்.

#1. உன்னுடைய மனைவி நானாகிறேன். மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது.

#2. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்க கூடாது.

#3. இரவு 8.30 மணிக்கு Kitchen Close.

#4. இரவு 9.30 மணிக்கு Bedroom Close Close

#5. தேங்காய் எண்ணை, ஷாம்பு, சோப்பு, துண்டு சொந்தமாய் எடுத்து கொண்டு போய் குளிக்க வேண்டும். அதற்காக தொந்தரவு செய்யக்கூடாது.

#6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடானாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.

#7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வெண்டும்.

#8. சாயங்காலம் 6.30 முதல் 9.30 வரை சீரியல் டைம், கூப்பிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது.

#9. உறக்கத்தில் குறட்டை விடவோ, சத்தம் போடவோ கூடாது.

#10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.

#Marriage Agreement: இப்படி 10 கண்டிசன் போட்டு மாப்பிள்ளையை அதிர வைத்துள்ளனர். இதற்கு ஆதார் கார்டு வேறு இணைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது போல் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது தான் வேற லெவல். | உறவில் எல்லாம் செய்யலாம் தவறொன்றுமில்லை - ஆனால் இந்த ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top