Misc

மார்க்கெட்டிங் வேலை செய்யும் நபர்களுக்கு பொண்ணு குடுக்க பெற்றோர்கள் தயங்குவது ஏன்?

Jun 07 2021 02:57:00 PM

திருமண வயதில் உள்ள ஒரு ஆணுக்கு பொண்ணு குடுக்க நம்ம நாட்டில் ஏகப்பட்ட விதிமுறைகளை வைத்துள்ளார்கள். என்னதான் நீங்க கை நிறைய சம்பளம் வாங்கினாலும் பொண்ணு வீட்டுல கேக்குற கேள்விக்கு முறையாக பதில் சொல்லவில்லை என்றால் உங்க நிலை அதோகதி தான். வெளிநாட்டில் லட்சங்களில் சம்பாதிக்கும் பையனாக இருந்தாலும் வயசு அதிகமா இருந்தா பொண்ணு கொடுக்க பெற்றோர்கள் சம்மதிப்பதில்லை.

marketing employee marriage

நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்கிறார். சம்பளம் 40000க்கும் மேல். இருந்தாலும் அவருக்கு எங்க போய் பொண்ணு கேட்டாலும் தம்பி செய்யுற வேலை எங்க வீட்டுக்கு செட் ஆகாது என்று மூஞ்சியில் அடித்த மாதிரி சொல்லிவிடுகிறார்கள். மெடிக்கல் ரெப்பாக இருக்கும் நபர்களின் சம்பளம் எப்போதும் 50000க்கும் மேல் தான் இருக்கும்.

marketing employee marriage

இந்த நேரங்களில் மெடிக்கல் ரெப்புக்கும் பொண்ணு கொடுக்க பெண் வீட்டார் மறுக்கின்றனர். மெடிக்கல் ரெப், மார்க்கெட்டிங் போன்ற வேலைகளை செய்யும் பசங்க அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். மாதத்தில் பாதி நாட்கள் வீட்டில் இல்லாத சூழ்நிலை ஏற்படும். பசங்க என்னதான் கெ ட்டப் பழக்கங்களே இல்லாத நபராக இருந்தாலும் வெளியூர் அடிக்கடி செல்லும் மாப்பிள்ளைகளுக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர்.

marketing employee marriage

ஒரு காலத்தில் லாரி டிரைவருக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க. லாரி டிரைவர் என்றால் பல இடங்களுக்கு சென்று சில பல ஜல்சா வேலைகள் எல்லாம் செய்வார்கள். சரி அதுக்காவது பொண்ணு கொடுக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கு. இப்படி எந்த காரணம் இல்லாமல் நம்மைப் போன்ற மார்க்கெட்டிங் வேலை செய்யும் நபர்களுக்கு பெண் தர மறுக்கிறார்களே என ஆண்கள் ஏக்கத்தில் இருக்கின்றனர்.

marketing employee marriage