இதென்னா சாதாரண பூமியா..? இந்தியாவை தேடி உலகமே உருவான ஆச்சர்யம் - மாறிப்போன வரலாறு.!
  • 12:16PM Mar 05,2019 Canada
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:16PM Mar 05,2019 Canada

your image

 

1496 ஆம் ஆண்டு கிழக்கு, மேற்கு, வடக்குக் கடற்பகுதிகளில் பயணித்து, கிறித்தவர்கள் அதுவரை அறிந்திராத புதிய நிலப்பகுதிகளைக் கண்டறிய அனுமதியளிக்கும் உத்தரவை, இத்தாலிய மாலுமியான ஜான் கேபாட்-டுக்கு இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி அரசர் வழங்கினார். அக்காலத்தில், ஹை-ப்ராசில் என்னும் தீவைக் கண்டறிய பலரும் விரும்பினர்.

1325 காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நிலப்படங்களில்(மேப்) சேர்க்கப்பட்டிருந்த இது உண்மையில் ஒரு கற்பனையான தீவாகும். இவ்வாறு இடம்பெற்று, ஆனால் உண்மையில் இல்லையென்று பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டவை பொய்த்தீவு(ஃபேண்ட்டம் ஐலேண்ட்) எனப்படுகின்றன. ஹை-ப்ராசில் தீவு பனிமூட்டத்தால் மூடப்பட்டே இருக்கும் என்றும், ஏழாண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு நாள் மட்டும் வெளித்தெரியும் என்றும் பண்டைய அயர்லாந்தில் நம்பிக்கை நிலவியது.

ஐரிஷ் மொழியில் ப்ரஸ் என்றால் அழகிய என்றும், இல் என்றால் தீவு என்றும் பொருள். ப்ரசெய்ல் குடிகள் என்று பொருள்படும் ஐ-ப்ரசெய்ல் என்ற சொல்லிலிருந்து இப்பெயர் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், கேபாட் வந்திறங்கிய இடம், வட-அமெரிக்காவில் தற்போது கனடாவைச் சேர்ந்ததான நியூஃபவுண்ட்லேண்ட் தீவாகும்.

1492இல் கொலம்பஸ் வந்திறங்கியதும் இன்னும் தென்பகுதியில் உள்ள தற்போதைய பகாமாஸ் தீவாகும். கொலம்பஸ் வந்திறங்கிய நாள் அமெரிக்காவில் கொண்டாடப்படுவதுபோல, கேபாட் வந்ததன் 500ஆம் ஆண்டு, கனடா, இங்கிலாந்து அரசாங்கங்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

என்ன நகைச்சுவை என்றால், இந்தியாவைத் தேடிப்போய், கொலம்பஸ் கண்டுபிடித்த இடத்திற்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என்பதைப்போலவே, கேபாட் கண்டுபிடித்த இடத்திற்கும் தற்போதைய பிரேசிலிற்கும் தொடர்பில்லை. பிரேசிலையும், இந்தியாவைத்தேடிவந்த போர்ச்சுகீசியத் தளபதியான பெட்ரோ காப்ரால்-தான் 1500இல் கண்டுபிடித்தார்.

ஆனால், இதற்கும், ஹை-ப்ராசிலுக்கும் தொடர்பில்லை! இங்கு கிடைத்த செந்நிற மரத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சிவப்புச் சாயம் ஐரோப்பாவில் புகழ்பெற்றது. ப்ராசா என்னும் போர்ச்சுகீசியச் சொல்லுக்கு கனன்றுகொண்டிருக்கும் தீ என்று பொருள். இம்மரத்தைப் போர்ச்சுகீசியர்கள் பிரேசில்வுட் என்றும் அழைத்ததால் இந்நிலப்பரப்பிற்கு பிரேசில்வுட்-டின் நிலம் என்று பெயரிட்டனர். அதுவே, பிரேசில் என்று மாறியது.

Share This Story

முருகானந்தம்

Top