#WhatsApp: வாட்சப்பில் ஒரு Bug, கண்டுபிடித்து ₹3.48 லட்சம் ரொக்கத்தைப் பரிசாகத் தட்டிய மணிப்பூர் இளைஞன்..!
  • 15:38PM Jun 14,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 15:38PM Jun 14,2019 Chennai

பொதுவா Google, Facebook மாதிரியான நிறுவனங்களில் தங்களின் தொழிற்நுட்பத்தில் எதாவது Bug இருப்பதைப் பொது மக்கள் கண்டறிந்தால் அவர்களுக்கு பரிசு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.தற்போது Facebook-ன் கீழ் இயங்கும் வாட்சப்பில் இருக்கும் Bug- கண்டுபிடித்து $5,000 பரிசாகப் பெற்றுள்ளார் மணிப்பூரை சேர்ந்த 22 வயதான பொறியாளர்.

மணிப்பூரை சேர்ந்த Zonel Sougaijam,வாட்சப்பில் Voice பேசும் போது ஒருவரின் அனுமதியின்றி Video Call செய்ய முடியும் என்ற Bug-ஐ கண்டறிந்துள்ளார்.இதை உடனே Report செய்த அவருக்கு Facebook நிறுவனம் $5,000 (இந்திய மதிப்பில் ₹3.48 லட்சம்) பரிசை வழங்கியதோடு தங்களின் தொழிற்நுட்பத்தில் இருக்கும் Bug- கண்டறிந்தவர்களுக்கு நன்றி கூறும் Facebook Thanks List for 2019 பட்டியலிலும் அவரின் பெயரை சேர்த்துள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top