எனக்கு வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்களுக்கு வேலையில்லை! பாஜக அமைச்சரின் மதவாத பிரச்சாரம்!
  • 18:16PM Apr 12,2019 Uttar Pradesh
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 18:16PM Apr 12,2019 Uttar Pradesh

நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருவதால், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 20 மாநிலங்களுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் போட்டியிடும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்குக் கடைசியாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Related image

இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி போட்டியிடுகிறார். சுல்தான்பூர் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் டூரப் காணி கிராமம் உள்ளது. இங்கு மேனகா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார், அப்போது பேசிய அவர், முஸ்லீம்களின் ஆதரவு இல்லாமல் எனக்கு வெற்றி பெற விருப்பம் இல்லை, முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், தேர்தலுக்குப் பின் அவர்கள் வேலை வேண்டும் என்று கூறி என்னிடம் வரக்கூடாது.

இது ஒரு கொடுத்து வாங்கும் வகையிலான உறவு. இதை நீங்கள் புரிந்து வாக்களிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஒருவர், மதவாதத்தைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்திருப்பது, அனைவரிடமும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது இந்தப் பிரச்சாரத்தைத் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளதா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top