மனைவி வர மறுத்ததால் கணவன் தற்கொலை !!
  • 16:31PM Nov 20,2018 Chennai
  • Written By AR
  • Written By AR
  • 16:31PM Nov 20,2018 Chennai

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் பிச்சிப்பூ தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 27). இவரும், அதே பகுதியை சேர்ந்த சம்பூர்ணம்(24) என்பவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கவின்(2) என்ற மகனும், 3 மாத ஆண் குழந்தையும் இருக்கிறது.

Image result for LIQUOR drinking  TAMILNADU mANஇந்நிலையில் மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவ்வபோது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் சம்பூர்ணம், கணவருடன் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதும், பின்னர் மணிகண்டன் அவரை சமரசம் செய்து அழைத்து வருவதும் வழக்கமாக இருந்தது வந்ததது

Image result for MAN HANGING SUICIDE

நேற்று முன்தினம் வழக்கம்போல் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சம்பூர்ணம் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகன்களுடன் தாம்பரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். மணிகண்டன் அங்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மணிகண்டன், வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Top