என்னதான் கட்சி மேல விசுவாசமா இருந்தாலும், இப்படியெல்லாமா செய்யுறது!?
  • 11:48AM Dec 06,2018 Chennai
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 11:48AM Dec 06,2018 Chennai

தெலுங்கானா தேர்தலில் தனது கட்சி தலைவர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஐதராபாத்து வாலிபர் வேண்டுதலுக்கு நாக்கை அறுத்துக்கொண்டுள்ளார். ஆந்திரா மாநிலம் வெஸ்ட் கோதாவரியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ நகர் காலணியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலுக்குச் சென்றுள்ளார். நீண்டநேரம் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்த இவர் திடீரென்று அவரது நாக்கை அறுத்து கோவில் உண்டியில் போட்டுள்ளார். மகேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இவரது பேண்ட் பையில் ஒரு கடிதம் இருந்துள்ளது. இதனைக் காவலர்கள் எடுத்துப் படித்தபோது, அதில் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் அவருக்கு விருப்பமான தலைவர்கள் இருவர் முதலமைச்சராகப் பதவி ஏற்கவேண்டும் என்று எழுதியுள்ளார். ஆனால் அவர் யார் அந்தக் கட்சி தலைவர்கள் என்று குறிப்பிடவில்லை. அதேபோல தானும் மந்திரியாக வேண்டும் என்று அதில் தனது ஆசையை எழுதி வைத்திருந்தார். இவரை உடனே பக்கத்தில் இருந்த உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் காவலர்கள் வந்து இவரை அடையாளம் கண்டறிந்த போது தான் தெரிந்தது, இவர் இதற்கு முன்பே இந்தக் கோவிலில் ஒருமுறை இதேப்போன்று ஒரு வேண்டுதல் வைத்து நாக்கை அறுத்துக்கொண்டுள்ளார். இப்போது மீண்டும் ஒருமுறை இப்படி நாக்கை அறுத்துக்கொண்டுள்ளார். இவர் ஆந்திர பிரேதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தீவிர பக்தர் என்பது தெரியவந்துள்ளது. அவரின் கட்சி வேட்பாளர் யாராவது தற்போது நடக்கவிருக்கும் தெலுங்கானா தேர்தலில் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக இவர் இப்படி ஏடாகூடமான வேண்டுதல் வைத்திருக்கலாம் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Top