மாமியாருக்குப் பிரியமான மருமகளாக விளங்க உதவும் பரிகாரம்
  • 00:33AM Feb 16,2019 Tamil Nadu
  • Written By DURAIMURUGAN
  • Written By DURAIMURUGAN
  • 00:33AM Feb 16,2019 Tamil Nadu

மாமியாருக்குப் பிரியமான மருமகளாக விளங்க உதவும் பரிகாரம்

உலகின் மிக நீண்ட போராக விளங்கும் மாமியார் மருமகள் சண்டை தீர, இருவருக்கும் இணக்கமான உறவு ஏற்பட உதவும் எளிய பரிகாரங்கள்.

1.கிழக்குத் திசையில் தலைவைத்து உறங்க மாமியார் மருமகள் சண்டை தீரும்.

2.வளர்பிறையில் வெள்ளி மோதிரத்தில் 4.5 முதல் 5.5 காரட் தரமான சந்திரகாந்தக் கல் பதித்து அந்த மோதிரத்தை முதலில் பசும்பாலிலும் பின்னர் சுத்தமான தண்ணீரிலும் கழுவிக் கொள்ளவேண்டும்.பின்னர் வளர்பிறை திங்கட்கிழமை அன்று சந்திரோதய வேளையில் அல்லது பௌர்ணமி அன்று இரவில் நிலவைப் பார்த்தபடியே அம்பாளை வணங்கி ஓம் ஹ்ரீம் வம் சந்திரதேவாய நமஹா என்று 27 தடவை ஜெபித்து வலதுகை மோதிர விரலில் அணிந்து கொள்ள மாமியார் மருமகள் சண்டை தீரும்.

3.அஷ்டலோக மோதிரம் செய்து வலது கை நடுவிரலில் அணிந்து கொள்ள மாமியார் மருமகள் சண்டை தீரும்.

4.200 கிராம் படிகாரம் வாங்கி அதைப் படுக்கை அறையில் தெற்குத் திசை தவிர்த்து ஏதேனும் ஒரு திசையில் படுக்கையறையின் ஒரு பகுதியில் வைத்துக் கொள்ள மாமியார் மருமகள் சண்டை தீரும்

Share This Story

You Might Also Like These
Related Stories
Top