Misc

மேஜிக் ரைஸ் பற்றி எங்கயாவது கேள்வி பட்டுருக்கீங்களா? இது என்ன புதுசா இருக்கு!

Jul 28 2021 04:10:00 PM

இயற்கையின் படைப்பில் நம் உலகில் நடப்பவை எல்லாமே மாயம் தான். தற்போது மேஜிக் ரைஸ் என்ற புதிய வகை அரிசியைப் பற்றி எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் இந்த மேஜிக் ரைஸ் வகை அரிசியை தனக்கு சொந்தமான இடத்தில் பயிரிட்டுள்ளார். அரிசியை அடுப்பில் வைத்து நீர் ஊற்றி கொதிக்க வைத்தால் மட்டும் தான் சாதம் உருவாகும். இதுதான் அரிசியின் கோட்பாடு.

magic rice telungana

ஆனால் இந்த மேஜிக் ரைஸை இப்படி செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வெறும் சுடுநீரில் போட்டால் இந்த அரிசி சாதமாக மாறிவிடும். மலைப் பகுதிகளில் விளையும் ஒருவகை அரிசிதான் இந்த போகா சவுல் அரிசி. அசாம் காடுகளில் இந்த அரிசி அதிக அளவில் விளைகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் பகுதிகளில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் இந்த அரிசியை அதிக அளவில் பயன்டுத்தி வந்தனர்.

magic rice telungana

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் வித்யாசமாக யோசிக்கக் கூடியவர். இவர் கடந்த இரண்டு வருடங்களாக புதிதாக எதாவது முயற்சி செய்யவேண்டும் என்று யோசித்துள்ளார். அப்போது தான் இந்த மேஜிக் அரிசியைப் பற்றி கேள்விப்பட்டுள்ளார். உடனே தனக்கு சொந்தமான 0.05 ஏக்கர் நிலப்பரப்புள்ள இடத்தில் மேஜிக் அரிசியை பயிரிட்டுள்ளார். இந்த மேஜிக் அரிசி அறுவடை செய்ய 145 நாட்கள் ஆகும். இந்த சிறிய இடத்தில் பயிரிட்டதன் மூலம் 5 மூட்டை வரை மேஜிக் அரிசி விளைச்சல் கிடைத்துள்ளது என்று சொல்கிறார். அனைவரும் இவரின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

magic rice telungana