Highrise

படுக்கையில் பக்காவா ஒரு பொண்ணு படுத்திருக்கே என ஆசையாக அருகில் சென்று பார்த்தால் திடீரென மறைந்து விட்டாளே! ஒருவேளை பே யாக இருக்குமோ?

Jun 19 2021 01:26:00 PM

கொரோனா பாதிப்பு வந்த பிறகு எல்லா வேலைகளையும் ஆன்லைன் வாயிலாக செய்வது வழக்கமாகி விட்டது. அமெரிக்காவில் வாடகைக்கு வீடு தேடுவது தற்போது புதுமைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீட்டை விர்ச்சுவல் டூர் மூலம் நீங்கள் பார்த்து பிடித்திருந்தால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தலாம்.

virtual-women

இந்தமுறையில் வீடு ஒன்றை தேடிக்கொண்டிருந்த பெண் தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். Streeteasy வழியாக அப்பார்ட்மென்ட் ஒன்றை தேடிக்கொண்டிருந்த அவர் ஒரு வீட்டின் படுக்கையறையில் ஒரு பெண் படுத்திருந்ததை பார்த்துள்ளார். வீட்டின் எல்லா அறைகளையும் பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு திடீரெனெ படுக்கையறையில் பெண் உருவத்தை பார்த்ததும் ப யமாக இருந்தது.

virtual-women

சில நொடிகள் த டுமாறிய பிறகு மீண்டும் படுக்கையை கவனித்தபோது அந்தப்பெண் உருவம் படுக்கையில் இல்லை. இதனால் மீண்டும் ப யந்து போன அவர் இந்த வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டு ஒருவேளை இந்தப்பெண் உருவம் பே யாக இருக்குமோ என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் அந்த வீட்டின் படுக்கையறையில் இருந்த பெண் தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

virtual-women

நீங்கள் விர்ச்சுவல் டூர் வழியாக பார்வையிட்டது என்னுடைய வீட்டைதான். வீட்டின் படுக்கையறையில் நான் தான் படுத்துக்கொண்டிருந்தேன் என்று அந்தப்பெண் விளக்கமளிக்க அதை பார்வையிட்ட மற்றொரு பெண் நான் உங்களை பே ய் என்று நினைத்து பய ந்து போயிருந்தேன். உங்களுடைய கவனத்துக்கு இந்த வீடியோ வந்து அதற்கு நீங்கள் விளக்கமளித்ததற்கு நன்றி. இந்த நாளை நான் வேடிக்கையாக உணர்கிறேன் என்று இவர் தற்போது கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் ஒன்னுமில்லாத விஷயத்தை ரெண்டு பெண்களும் சேர்ந்து கொண்டு செம ரகளை செய்துள்ளனர் என்றால் பாருங்களேன்