Exquisite

நீ விடை பெறவேண்டிய நேரம் வந்து விட்டது! உன் சந்ததிகள் நிச்சயம் உன்னை நினைத்து பெருமைப்படும்! இந்த சிறு உயிரினம் எவ்வளவு பெரிய விஷயங்கள் செய்திருக்கிறது தெரியுமா?

Jun 10 2021 06:43:00 PM

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம் மிக முக்கியமாகும். ஒவ்வொரு நாட்டிலும் ராணுவத்துறையில் பலவிதமான துணைப்பிரிவுகள் இருக்கும். அந்த பிரிவுகளில் பல கிளைப்பிரிவுகள் அதற்கு தகுந்த துறை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இருப்பர். ஆரம்ப காலத்தில் ராணுவத்தில் ஆண்கள் மட்டுமே இருந்தனர். பிறகு ஆண்களுக்கு நிகராக பெண்களும் ராணுவத்தில் நுழைந்து சாகசங்களை புரிந்து வருகின்றனர்.

magava-rat-retired

காவல்துறை அல்லது ராணுவம் இரண்டிலுமே வெடிகுண்டை கண்டுபிடிப்பதற்கு ஒரு தனி பிரிவு இருக்கிறது. பொதுவாக பல நாடுகளிலும் வெடிகுண்டை கண்டுபிடிப்பதற்கு மோப்பநாயை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ள கம்போடியா நாட்டில் இது சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த நாட்டில் வெடிகுண்டு மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்கு பெரிய வகை எலி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

magava-rat-retired

மகாவா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த எலிக்கு 7 வயதாகிறது. இந்த எலி செய்துள்ள சாகசங்கள் அனைவரையும் வியக்க வைக்கிறது. இதுவரை இந்த எலி 71 கண்ணிவெடிகளையும், 12க்கும் மேற்பட்ட வெடிபொருட்களையும் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. உருவத்தில் சிறிதாக இருந்தாலும் பல உயிர்களை இதுவரை காப்பாற்றியுள்ள இந்த எலியின் சேவையை பாராட்டி துணிச்சல் மிக்க விலங்கு என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதற்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய இடத்தில் தற்போது புதிதாக பயிற்சி பெற்ற எலிகள் களமிறக்கப்பட்டுள்ளது.