#TNPSCGROUP1: 200 கேள்வியில 24 கேள்விதான் தப்பு!!! HIGH COURT-ல் ஒப்புக் கொண்டு திட்டு வாங்கிய TNPSC தரப்பு!!!
  • 17:06PM Jun 13,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:06PM Jun 13,2019 Chennai

கடந்த மார்ச் மாதம் TNPSC – TAMILNADU PUBLIC SERVICE COMISSION எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்கான EXAMS நடைபெற்றது. இதில் முதல் நிலை எழுத்துத் தேர்வில் வழங்கப்பட்ட QUESTION PAPER-ல் வழக்கமாக இடம்பெறும் 200 கேள்விகளில், கிட்டத்தட்ட 18 வரைக்கும் தவறான கேள்விகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தேர்வு எழுதியவர்கள், தேர்வு ஆணையத்திடம் கடிதம் மூலமாக இந்தக் கேள்விகளை REEVALUATE செய்யாமல், தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதை நிராகரித்த தேர்வு ஆணையம் முடிவுகளை வெளியிட்டது.

இதனால், வருத்தமடைந்த விக்னஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், தொடர்ந்த வழக்கில் ஆஜரான தேர்வு ஆணைய அதிகாரிகள் சொன்ன பதில், உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளையே கடுப்பாக்கியது என்பதுதான் உன்மை. காரணம், அவர்கள் 18 கேள்விகள் அல்ல, தவறான கேள்விகள் மொத்தம் 24, அதாவது கேட்கப்பட்ட மொத்தக் கேள்விகளில் 10% மேல் தவறான கேள்விகள் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதையடுத்துக் கடுப்பான நீதிபதிகள், போட்டித் தேர்வுகளில், 24 கேள்விகள் என்பது விளையாட்டல்ல என்று எச்சரிக்கை விடுத்ததோடு, அவர்கள் கோரியபடி பதில் மனு அனுப்ப 17ம் தேதி வரை அவகாசமும் வழங்கி உத்திரவிட்டுள்ளனர். பார்த்துப் படித்து, குறிப்பெடுத்து, கேட்கப்படும் கேள்விகளிலேயே 24 கேள்விகள் தவறானதென்றால், எந்த நம்பிக்கையில் இவர்களது தேர்வு முறையை நம்ப முடியும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பதில் மனுவில் என்ன கதை சொல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!

TNPSC Group IV  |  TNPSC Unqualified Degrees  |  Sweeper Job Graduates  |  TNPSC Group II  |  TNPSC Translator Job  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top