#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண்! முத்தம் கொடுக்க ஒரு பெண்! இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா?
  • 15:24PM May 24,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 15:24PM May 24,2019 Chennai

இன்றைய இளைஞர்கள் தாங்கள் சிங்கிள் என்று வாய்கிழிய பேசிவந்தாலும், ஊரிலுள்ள அனைத்து பெண்ணுக்கும் எதாவது ஒரு வழியில் முயற்சி செய்துவருவார்கள். இதில் சில ஆண்கள் ஒன்றுக்கு இரண்டு பெண்களுடன் கடலை போட்டுவருவார்கள். ஒருவனுக்குக் காதலிக்கவே ஆள் இல்லாதபோது, இவர்களுக்கு மட்டும் எப்படி ஒன்றுக்கு இரண்டு பெண்களுடன் கடலை போடுகிறார்கள் என்று யோசிக்கலாம். ஆனால் இந்த ஆண்களுக்கு இரண்டு பெண்களையும் சமாளிப்பதில் அதிகப் பிரச்சனைகள் உள்ளது. ஆணோ, பெண்ணோ எதிர்பாராத நேரத்தில் யார் மீது வேண்டுமானாலும் காதல் வரலாம்.

 

காதலுக்குக் கண்ணில்லை என்று கூறுவார்கள், அது உண்மை தான்! யார் மீது வருகிறது என்றும் தெரியாது, யாருடன் வருகிறது என்றும் தெரியாது! பொதுவாக ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கும் நபருக்கு மற்றொரு பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால், அவருடன் கைகோர்த்து சென்றுவிடுகின்றனர். இப்படி ஏற்படுவது சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால் சில ஆண்களுக்குத் தான் காதலித்த பெண்ணை விடவும் மனமிருக்காது, ஈர்ப்பு ஏற்பட்ட பெண்ணையும் விட மனமிருக்காது. இந்தக் குழப்பத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் முழிப்பார்கள். இப்படிக் குழப்பத்தில் இருக்கும் ஆண்கள் விரைவில் யாரை தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுத்தாக வேண்டும், இல்லாவிட்டால் இருவரையும் இழந்து நிர்கதியில் நிற்கவேண்டும்!

 

பொதுவாக நீங்கள் உறவில் இருக்கும்போது மற்றொரு பெண் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது என்றால், நீங்கள் காதலிக்கும் பெண்ணிடம் கிடைக்காத சந்தோசத்தை இந்தப் பெண்ணிடம் உணருகுறீர்கள் என்று அர்த்தம். உங்கள் காதலிக்கும் உங்களுக்கும் நடுவில் இந்தப் பெண் வருவதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் காதலியிடம் இல்லாத ஒருவிஷயம் என்ன இந்தப் பெண்ணிடம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். இதனைத் தாண்டி எதார்த்தமாகப் பார்த்தாலே அந்தப் பெண் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது என்றால் அது காதல் அல்ல காமம்!

 

உங்களுக்கும், உங்கள் காதலிக்கும் நடுவில் ஒளிவு மறைவு இல்லாமல் இருந்திருக்கும். உங்கள் இருவருக்கும் எந்த மறைவும் இருக்காது. ஆனால் இந்த ஈர்ப்பு ஏற்பட்ட பெண்ணைப் பற்றி உங்களுக்கு முழுவதுமாகத் தெரியாது. எனவே இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதை விட உங்கள் காதலியிடம் பிரச்னையைக் கூறி சரி செய்துகொள்ளலாம். புதிதாக வந்த பெண்ணைக் காட்டிலும் உங்களைப் புரிந்து இதனை நாட்கள் உண்மையாக இருந்த காதலி எந்த நேரத்திலும் விட்டுசெல்லமாட்டார். ஒருவேலை மனதளவில் உங்கள் காதலியுடன் புரிதல் இல்லாமல் இந்தப் பெண்ணை நாடி செல்கிறீர்கள் என்றால் அது உங்கள் விருப்பம். ஆனால் எவ்வளவு முடியுமா அவ்வளவு சீக்கரம் முடிவெடுங்கள்!

 

ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் மீது காதல் வருகிறது என்றால், நிச்சயம் பிரச்சனை உங்களிடம் தான் இருக்கும். மற்றவர் மேல் பழிகூறுவதை விட உங்களுக்கு ஏன் மற்றொரு பெண் மீது காதல் ஏற்பட்டுள்ளது என்பதைச் சிந்தியுங்கள். உங்கள் காதலியை மட்டுமே குறை சொல்லமுடியாது. நீங்கள் எதிர்பார்ப்பதை போல அவரும் உங்களிடம் எதையாவது எதிர்பார்த்திருக்கலாம். உங்களிடம் அன்பை எதிர்பார்க்கும் போது நீங்கள் அதை வேறு ஒரு பெண்ணுக்கு தர தயாராக இருந்தால், அது யாருடைய தவறு என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். நமது நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சட்டமே உள்ளது, எனவே உங்கள் எண்ணத்தை மாற்றி எந்தப் பெண் உங்களைப் புரிந்து வாழ்க்கை துணையாக இருப்பாரோ அவரைக் காதலியுங்கள்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top