Lushgreen

இப்படி செய்துபாருங்கள், நீங்கள் விரும்பிய பெண் உங்களை விரும்புகிறாளா என்று தெரிந்துவிடும்

Apr 08 2021 11:47:00 AM

பொதுவாக பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது மிக கடினமான விஷயமாகும். ஒரு பெண் உங்களை விரும்புவதை அவளாக வெளிப்படுத்த வாய்ப்பு மிகக் குறைவுஆனாலும் அதை தெரிந்து கொள்ளாமல் நீங்கள் உங்கள் காதலை சொல்ல முடியாது. தெரிந்து கொள்ளாமல் முந்திரிக்கொட்டை மாதிரி செயல்பட்டால் செருப்படி தான் மிஞ்சும். உங்களுடைய மனம் கவர்ந்த பெண் உங்களை விரும்புவதை அவர்கள் அனுப்பும் மெசேஜ் உங்களுக்கு காட்டிக்கொடுக்கும்.

love-identifier

உரையாடலை முதலில் யார் தொடங்குவது என்பதில் தான் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. அவர்களுக்கு உங்களை பிடித்திருந்தால் அவர்களாகவே உரையாடலை தொடங்குவார்கள். இது அவர்களின் காதல் வெளிப்பாட்டின் முதல் படியாகும்மெசேஜ் அனுப்பினால் ஒரு சிலர் விரைவாக பதில் அனுப்புவார்கள். ஒரு சிலர் தாமதமாக அனுப்புவார்கள். ஒரு மெசேஜ் உடனே வருவது இயல்பு. நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் விரைவாக அவர்கள் பதிலை அனுப்பினால் அவர்கள் உங்களுக்கு உடனே பதிலளிக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம். அதாவது அவர்களுக்கு உங்களை பிடித்திருந்தால் நீங்கள் கேட்டவுடனே ரிப்ளை வந்து விடும்.

 

love-identifier

உங்கள் மேல் ஒரு பெண்ணுக்கு ஆசையிருந்தால் உங்களை பற்றி நிறைய தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். இதன் விளைவாக உங்களுக்கு பெரிய கேள்விகளை கொண்ட மெசேஜ்கள் வர தொடங்கும். உங்களை பிடித்திருந்தால் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் கவனிப்பார்கள். ஸ்மைலி அனுப்புவதில் கூட கவனித்து மாற்றம் இருந்தால் உங்களிடம் அதை பற்றி கேட்பார்கள்.

love-identifier

தன்னை பற்றிய ரகசியங்களை உங்களிடம் வெளிப்படையாக ஒரு பெண் கூறினால் அவளுடைய மனதில் உங்களை காதலிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். தன்னைப்பற்றி உங்களிடம் சொல்லி உங்கள் கவனத்தை தன் மீது மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று அந்தப் பெண் நினைக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் முதலில் காதலை சொல்ல வேண்டும் என்று அந்தப் பெண் எதிர்பார்ப்பதாக அர்த்தம்.