#StevenWeber காதலை வித்தியாசமாகச் சொல்ல முயற்சித்து விபரீதத்தில் சிக்கிய வாலிபர்!
  • 15:36PM Sep 23,2019 Tanzania
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 15:36PM Sep 23,2019 Tanzania

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரை சேர்ந்தவர் Steven Weber. இவர் தனது காதலி Kenesha Antoine உடன் தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குக் கடலுக்கு அடியில் சுமார் 32 அடி ஆழத்தில் உள்ள Deepsea Hotel-ல் இந்தக் காதல் ஜோடிகள் இருவரும் தங்கியுள்ளனர். அழகான டீப்சீ ஹோட்டலில் இருவரும் தனிமையாக இருக்கும் இந்தச் சமயத்தில் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியுமா என்பதைக் கேட்க விரும்பியுள்ளார். இதற்கு ஒரு வித்தியாசமான திட்டத்தையும் திட்டியுள்ளார்.

#Factcheck : சிவந்த முதுகு, கொடூரமாக தாக்கப்பட்ட 6 வயது சிறுமி - பேஸ்புக்கில் வைரலாக பரவும் பதிவின் பின்னணி!

தனது காதலியை ஹோட்டல் ரூமில் ஒரு இடத்தைக் காட்டி அங்கேயே நிற்கவைத்துவிட்டு, வேகமாக ஓடி சென்றுள்ளார். அவரது காதலிக்கு ஒன்றும் புரியவில்லை. டீப்சீ ஹோட்டல் என்பதால் அவர் நிற்கும் இடத்திற்கு எதிரில் கடல் நன்றாகத் தெரியும். வேகமாக ஓடிவந்த Steven Weber தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்தையும், திருமண மோதிரத்தையும் ஈடுகொண்டு தண்ணீருக்குள் இறங்கினர். இவர் மெதுவாக அவரது அறையின் கண்ணாடி வழியாக அவர் எழுதிய கடிதத்தையையும், மோதிரத்தையும் தனது காதலியிடம் காட்டினார். அந்தக் கடிதத்தில், "உன்னைப் பற்றி நான் விரும்பும் அனைத்தையும் சொல்லும் அளவுக்கு என்னால் மூச்சு விட முடியாது, ஆனால் உன்னைப் பற்றி நான் நேசிக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நான் ஒவ்வொரு நாளும் அதிகமாக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தையும், தனது காதலனின் முயற்சியையும் Kenesha Antoine மெய் மறந்து கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக Steven Weber-க்கு மூச்சுதிணறல் ஏற்பட்டுத் தண்ணீரில் மூழ்கினார். மேலே இருந்த ஹோட்டல் ஊழியர்கள் அவரைக் காப்பாற்றுவதற்கு வேகமாகத் தண்ணீருக்குள் இறங்கினர். ஆனால் அவர்கள் அவரை மேலே கொண்டுவருவதற்குள் Steven Weber மூச்சுதிணறல் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அவரது காதலி அங்கேயே கதறி அழுதுள்ளார். Steven Weber மரணம் குறித்துத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட Kenesha Antoine தனது வாழக்கையில் மிக மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top