Lushgreen

வெளிநாட்டு பெண் கெட்டப்பில் அசத்தும் ஈழத்து தமிழச்சி ! பரவசத்துடன் ஏங்கி தவிக்கும் நெட்டிசன்கள் !

Apr 04 2021 09:37:00 AM

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருடைய வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்க தொடங்கியது.

losliya-latest

அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டான லாஸ்லியா தற்போது 4 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் அவர் நடித்துள்ள ப்ரென்ட்ஷிப் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது கியூட்டான படங்களை வெளியிடுவார் லாஸ்லியா.

losliya-latest

தற்போது அவர் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கோட் சூட் அணிந்து கொண்டு வெளிநாட்டு பெண் போல அசத்தலாக தோற்றமளிக்கிறார். அவருடைய இந்த கோட் சூட் கெட்டப் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த கெட்டப்பில் லாஸ்லியாவை பார்த்து அசந்து போயுள்ள நெட்டிசன்கள் எப்போது அவரை திரையில் காண முடியும் என்று எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.