ஜெகநாதர் அவதாரத்தில் கண்ணன் !!
  • 08:44AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 08:44AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

பூரி ஜெகநாதர் கோவில் இந்தியாவில்  ஒடிசா மாநிலத்தில் உள்ளது. கிழக்கு கடற்கரையில் இக்கோவில் அமைந்திருக்கிறது.இக்கோவிலில் முக்கியமாக ஜெகநாதர்,பலபத்திரர்,சுபத்ரை, ஆகிய மூன்று தெய்வங்கள் இருக்கிறார்கள்.

temple1.jpg

மூன்று தெய்வங்களின் திருமேனி மரத்தால் ஆனவை, பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை புதிய மரத்தால் புதிப்பிக்கப்படும். 12 ஆம் நூற்றாண்டில் கங்க குல அரசன் அனந்தவர்மன் இக்கோவிலை கட்டினார்.

templee puri.jpg

வருடத்திற்கு ஒருமுறை  தேர் திருவிழா நடைபெறும் இதில் மூன்று தெய்வங்களுக்கு தனி தனியாக தேர் இருக்கும். இந்த தேர் திருவிழா உலக புகழ் பெற்றது இதை ரத யாத்திரை எனவும் அழைப்பர்.

rathayathirai11.jpg

ரத யாத்திரை 9 நாட்கள் நடைபெறும் நாடு முழுவதிலும்  இருந்து பக்தர்கள் ரத யாத்திரையில் கலந்து கொள்வார்கள்.பூரி நகர மன்னன் தங்க துடைப்பத்தால் ரத்ன வீதி எனும் தேரோடும் வீதியை சுத்தம் செய்வர்.

பாலபத்திரர் அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.இந்த தேர்கள் குண்டிச்ச கோவில் செல்லும்.ஆடி மாசம் இத்தேரோட்டம் நடைபெரும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top